கம்பராமாயணம் 6372 · யுத்த 3.142

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முப்புறத்து உலகத் துள்ளும் ஒழிவு அற முற்றும் பற்றி,
தப்பு உறல் இன்றிக் கொன்று, தையலார் கருவும் தள்ளி,
இப்புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி,
அப்புறத்து அண்டம் தோறும் தடவின, சிலகை அம்மா!

பொருள் · Meaning in Tamil

முப்புறத்து உலகத் துள்ளும் - மூன்று உலகங்களிலுள்ளும்; ஒழிவு அறமுற்றும் பற்றி - மிஞ்சி இருக்காதபடி முழுவதையும் பிடித்து; தப்புதல் இன்றிக் கொன்று - அரக்கர்கள் எவரும் தப்பிவிடாதபடி எல்லோரையும் கொன்று; தையலார் கருவும் தள்ளி - அரக்க மாதர்களின் வயிற்றிலே தங்கிய கர்ப்பத்தையும் அழித்து; இப்புறத்து அண்டத்து - இப்புறம் உள்ள இந்த அண்டத்திலே, யாரும் அவுணர் இல்லாமை எற்றி - அரக்கர் எவரும் இல்லாதபடி அடித்துக் கொன்று; அப்புறத்து அண்டம் தோறும் - அப்பாலுள்ள அண்டங்கள் தோறும் சென்று; தடவின சிலகை - (நரசிம்ம மூர்த்தியின்) சிலகைகள் தடவலாயின.

முப்புறத்து உலகம் - சுவர்க்கம், மத்யம், பாதாளம் என்றும் மூன்று உலகங்கள். ஒழிவு அற - மிஞ்சுதல் இன்றி. தப்புதல் இன்றி - தப்பிவிடாதபடி. தள்ளி - சிதைத்து. அப்புறத்து அண்டம் - இவ்வண்டத்துக்கு அப்பாலுள்ளபுற அண்டம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through all three worlds, seizing every one with none remaining,
  2. killing without letting one escape, destroying even the unborn in demon women's wombs,
  3. striking until in this cosmos not a single demon was left,
  4. some of its hands went groping through every cosmos beyond, ah!

What the poem says

The demons are wiped out completely across heaven, earth and the underworld, down to the unborn. Having emptied this universe of them, some of the Man-Lion's countless hands reach out into the other universes beyond, searching for any who might be left.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muppuṟattu ulakattuḷḷum oḻivu aṟa muṟṟum paṟṟi,
tapputal iṉṟik koṉṟu, taiyalār karuvum taḷḷi,
ip puṟattu aṇṭattu yārum avuṇar illāmai eṟṟi,
ap puṟattu aṇṭa mtōṟum taṭaviṉa, cila kai ammā!