கம்பராமாயணம் 6373 · யுத்த 3.143
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கனகனும் - (இவ்வாறு நரமடங்கல் அரக்கர்களை எல்லாம் கொன்று நின்ற போது) அந்த இரணியனும்; அவனில் வந்த - அவனுக்கு மகனாக வந்து பிறந்த; வானவர் களைகண் ஆன - தேவர்களுக்கெல்லாம் பாதுகாவலனான; அனகனும் - குற்றமற்ற பிரகலாதனும்; ஒழிய - நீங்கலாக; பல்வேறு அவுணர் ஆனவரை எல்லாம் - மற்ற பல்வேறு வகைப்பட்ட அரக்கர்கள் எல்லோரையும்; அந்நெடுங்கண் சீயம் - அந்தப் பெரிய கண்களை உடைய நரசிங்கப் பெருமான்; நினைவதன் முன்னம் கொன்று நின்றது - நினைக்கும் நேரத்துக்கு முன்பே கொன்று நின்றது; வனை கழலவனும் - அழகிய வீரக் கழல்களை அணிந்தவனான அந்த இரணியனும்; மற்று அம் மடங்கலின் வரவு நோக்கி - அந்த நரமடங்கலான நரசிங்கப் பெருமானது வருகையைப் பார்த்து...
களைகண் - பாதுகாப்பு (பற்றுக் கோடு). வனைகழல் - அழகிய கழல்கள். 'வரவு நோக்கி' என்பது அடுத்த பாடலில் வரும் "நின்றான்" என்பதைக் கொண்டு முடியும். இப்பாட்டு குளகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Except for Kaṉakaṉ and the sinless one born of him, the refuge of the gods,
- all the demons of many kinds
- that long-eyed Lion slew before a thought could form, and stood;
- and he of the finely wrought anklets, watching that Lion come on,
What the poem says
Only two demons are left alive: Iraṇiyaṉ himself, called Kaṉakaṉ, and his son Pirakalātaṉ, here called the protector of the gods. The Man-Lion has killed all the others faster than thought. The sentence about Iraṇiyaṉ watching the Lion approach finishes in the next verse.