கம்பராமாயணம் 6374 · யுத்த 3.144

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வயிர வாள் உறையின் வாங்கி, வானகம் மறைக்கும் வட்டச்
செயிர் அறு கிடுகும் பற்றி, வானவர் உள்ளம் தீய,
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச, ஆர்த்து, அங்கு
உயிருடை மேரு என்ன வாய் மடித்து, உருத்து நின்றான்.

பொருள் · Meaning in Tamil

வயிரவாள் உறையின் வாங்கி - (நரசிம்மத்தின் வருகையைப் பார்த்த இரணியன்) உறுதியான வாளை உறையிலிருந்து வெளியே உருவி ஒரு கையில் பிடித்து; வானகம் மறைக்கும் - வானத்தையே மறைக்கும்படியான; வட்டச் செயிர்அறு கிடுகும்பற்றி - வட்ட வடிவமான குற்றமற்ற கேடயத்தை ஒரு கையில் பிடித்து; வானவர் உள்ளம் தீய - தேவர்கள் மனம் தீய்ந்து கெட; அயிர்படர் வேலை ஏழும் - நுண் மணல் படர்ந்த கரை உடைய ஏழுகடல்களும்; மலைகளும் அஞ்ச ஆர்த்து - மலைகளும் அஞ்சி நடுங்க ஆரவாரம் செய்து; அங்கு உயிருடை மேரு என்ன - அங்கே உயிர் கொண்டு உலவும் மேருமலை என்று கூறுமாறு; வாய் மடித்து உருத்து நின்றான் - வாயை மடித்து சினம் கொண்டு நின்றான்.

வயிரம் - திண்மை (உறுதி). கிடுகு - கேடயம். செயிர்அறு - குற்றமற்ற. அயிர் - நுண் மணல். படர்- படர்ந்த. 'உயிருடை மேரு' - உயிரோடுள்ள மேரு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Drawing his strong sword from its sheath, and grasping the round, flawless shield
  2. that could hide the sky, so that the gods' hearts were seared,
  3. he roared till the seven seas with their fine-sanded shores and the mountains quaked, and there,
  4. like Mēru come to life, he bit his lip and stood in fury.

What the poem says

Seeing the Man-Lion coming toward him, Iraṇiyaṉ draws his sword and takes up his huge round shield. His war cry terrifies gods, seas and mountains. He stands biting his lip in rage, as tall and solid as Mount Mēru come alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vayira vāḷ uṟaiyiṉ vāṅku, vāṉakam maṟaikkum vaṭṭac
ceyir aṟu kiṭukum paṟṟi, vāṉavar uḷḷam tīya,
ayir paṭar vēlai ēḻum malaikaḷum añca, ārttu, aṅku
uyiruṭai mēru eṉṉa vāy maṭittu, uruttu niṉṟāṉ.