கம்பராமாயணம் 6375 · யுத்த 3.145

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நின்றவன் தன்னை நோக்கி - சினந்து நின்ற இரணியனைப் பிரகலாதன் பார்த்து; நிலை இது கண்டு நீயும் - பெருமானின் வலிமை நிலையினைக் கண்டும் நீ; ஒன்றும் உன் உள்ளத்துயாதும் உணர்ந்திலை போலும் அன்றே - உனது உள்ளத்திலே இன்னும் எதுவும் உணரவில்லை போலும்; வன்தொழில் ஆழி வேந்தை - வன்மைமிக்க போர்த் தொழில் வல்ல சக்கரப்படையுடைய தலைவனை; வணங்குதி - (இப்போதாவது) வணங்குவாயாக; வணங்கவே உன் புன் தொழில் பொறுக்கும் - பணிந்து வணங்குவாயாயின் உனது அறியாது செய்த புன்மைகளைப் பொறுத்தருள்வான்; என்றான் உலகெலாம் புகழநின்றான் - உலகமெல்லாம் புகழும்படி நின்றவனான பிரகலாதன் இவ்வாறு கூறினான்.

நிலை - எங்கும் நிறைந்த நிலை; அரக்கர் பலரைக் கொன்று நின்ற நிலை எனலுமாம். ஆழி - சக்கரப்படை. முன்பு செய்த தவறுகளான புல்லிய செயல்கள். பரமனிடம் பரம பத்தி கொண்டிருந்தவன் என்பதால் பிரகலாதனை 'உலகெலாம் புகழ நின்றான்' என்றார். வேதங்களைக் கற்றுணர்ந்த நீ இறைவனது எல்லையில்லா வல்லமையை உணராதவனாய் இருக்கிறாயே என்பான் 'ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும்' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at him as he stood there, he said: "Even seeing this state of things,
  2. it seems you have understood nothing at all in your heart;
  3. bow down to the King of the mighty discus; if you bow, your
  4. base deeds he will forgive" — so said he who stood praised by all the world.

What the poem says

Pirakalātaṉ, whose devotion has made him famous throughout the world, urges his father one last time. Even now, after seeing God's power, he can bow to the Lord who bears the discus, and his past wrongs will be forgiven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'niṉṟavaṉtaṉṉai nōkki, "nilai itu kaṇṭu, nīyum
oṉṟum uṉ uḷḷattu yātum uṇarntilai pōlum aṉṟē;
vaṉ toḻil āḻi vēntai vaṇaṅkuti; vaṇaṅkavē, uṉ
puṉ toḻil poṟukkum'' eṉṟāṉ ulaku elām pukaḻa niṉṟāṉ.