கம்பராமாயணம் 6376 · யுத்த 3.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கேள் இது - (பரமனை வணங்கும்படி கூறிய பிரகலாதனைப் பார்த்து) நான் சொல்லும் இதனைக் கேள்; நீயும் காண- நீயும் (மற்றவர்களுடன் நேரில் பார்த்துக் கொண்டிருக்க; கிளர்ந்த கோளரியின் - சினம் கொண்டெழுந்த, கொலைத் தொழில் வல்ல இந்தச் சிங்கத்தின்; கேழ்இல் தோளொடு தாளும் நீக்கி - ஒப்பற்ற தோள்களையும், கால்களையும் வெட்டிக் களைந்து; நின்னையும் துணித்து - உன்னையும் வாளால் துண்டித்து; பின்என் வாளினைத் தொழுவது அல்லால் - பிறகு எனது வாளைத் தொழுவதல்லாது; வணங்குதல் - பணிந்து வணங்குவதென்பது; மகளிர் ஊடல் நாளினும் உளதோ என்றான் - பெண்களுடன் ஊடல் புரியும் காலத்தும் உள்ளதோ என்று கூறிய இரணியன்; அண்டங்கள் நடுங்க நக்கான் - எல்லா அண்டங்களும் அஞ்சி நடுங்கும்படி சிரித்தான்.
நீயும்காண - இந்தச் சிங்கத்தைப் புகழ்ந்து பேசுகின்ற நீயும் கண்ணாரக் காணும்படி என்பது பொருள். கோள் அரி - கொல்லவல்ல சிங்கம். கோள் என்பது கொள் என்பதனடியாகப் பிறந்த சொல்லாயின் இலக்குத்தப்பாத சிங்கம் எனப்பொருள்படும். கேழ் - ஒப்பு. ஊடலைத் தீர்க்க, தலைவியைத் தலைவன் வணங்குதல் அகப் பொருளில் கூறப்படும். அத்தகைய ஊடல் காலத்திலும் வணங்காதவன் என்பது கருத்து. "மாதர் புலவியினும் வணங்காத மகுடம்" (3069) என இராவணனைக் கம்பர் கூறுவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Hear this: while you look on, I will lop off the matchless
- shoulders and legs of this risen, killing lion, and cut you down too; then —
- except to worship my own sword, is bowing something I have done
- even in the days of women's lovers' quarrels?" — saying this, he laughed till the worlds shook.
What the poem says
Iraṇiyaṉ refuses with contempt. He will cut the Lion to pieces and his son as well, and the only thing he bows to is his own sword. In Tamil love poetry a hero bows to his beloved to end a lovers' quarrel, but Iraṇiyaṉ has never bowed even then. Elsewhere Kampaṉ says the same of Irāvaṇaṉ's crown, which never bent even in lovers' quarrels.