கம்பராமாயணம் 6377 · யுத்த 3.147

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நகை செயா, வாயும் கண்ணும் வாளொடு நடந்த தாளும்
புகைசெயா, நெடுந் தீப் பொங்க உருத்து எதிர்பொருந்தப் புக்கான்;
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்;
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்.

பொருள் · Meaning in Tamil

நகை செயா - (இரணியன் சினம் மிகச்) சிரித்து; வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் புகை செயா - தனது வாயிலும், கைகளிலும் வாளுடன் நடந்த கால்களிலும் புகை தோன்ற; நெடும் தீப்பொங்க உருத்து - கண்களில் தீப்பொறி பரக்கச் சினந்து; எதிர் பொருந்தப் புக்கான் - நரசிங்கப் பிரானை எதிர்த்துப் போரிடச் சென்றான்; மிகை செய்வார் வினைகட்கெல்லாம் - தீங்கு செய்பவரின் செயல்களுக்கெல்லாம்; மேற் செயும் வினையம் வல்லான் - மேலாகச் செயல்படும் வினையத்தில் வல்லவரான பெருமான்; தொகை செயற்கு அரிய தோளால் - எண்ணி அளவிட இயலாத தனது அரிய தோள்களாலும்; தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான் - தாள்களாலும் அந்த இரணியனைச் சுற்றி வளைத்துக் கொண்டான்.

நகை செயா, புகை செயா என்பன செய்து என்னும் பொருள் கொண்ட 'செயா' என்ற வாய்பாட்டு வினை எச்சங்களாம். உருத்து - வெகுண்டு. மிகை - மிக்கவை. மிகுதியான் மிக்கவை செய்தாரை என்ற திருக்குறள் நினைக்கத்தக்கது. வினை - செயல். வினையம் - சூழ்ச்சித் திறம். தொகை செயல் - எண்ணல். சுற்றிச் சூழ்தல் - சுற்றி வளைத்துக் கொள்ளுதல். தவப் பெருக்கும் தான் இறவாவண்ணம் நிலைத்தற்கு வேண்டிய வகையில் ஆழ்ந்த அறிவுத் திறத்தால் திட்டமிட்டுப் பெற்ற வரங்களும் உடையவன் இரணியன். அத்தகையவனின் திட்டத்தையும் விழுங்கி மேம்படும் சூழ்ச்சித் திறம் உண்டு என்பதைப் புலப்படுத்தவே பெருமானை 'மிகை செய்வார் வினைகட்கெல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்' என்று கம்பர் குறிப்பிடுகிறார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Laughing, his mouth, his hands, and his feet that strode with the sword
  2. all smoking, fierce fire flaring, he raged and rushed to close with him;
  3. with shoulders beyond counting and with his feet He encircled and enclosed him —
  4. He who is master of the stratagem that overreaches every deed of the overreaching.

What the poem says

Iraṇiyaṉ charges in such fury that smoke and fire seem to pour from him. The Man-Lion simply wraps him in his countless arms and legs. Iraṇiyaṉ had cleverly won boons meant to make him unkillable, but God is called the one whose craft outdoes every scheme of the wicked.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nakaiceyā, vāyum kaiyum vāḷoṭu naṭanta tāḷum
pukaiceyā, neṭun tīp poṅka uruttu etir poruntap pukkāṉ;
tokai ceyaṟku ariya tōḷāl tāḷkaḷāl cuṟṟic cūḻntāṉ;
mikai ceyvār viṉaikaṭku ellām mēṟceyum viṉaiyam vallāṉ.