கம்பராமாயணம் 6378 · யுத்த 3.148

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இருவரும் பொருந்தப் பற்றி, எவ் உலகுக்கும் மேலாய்,
'ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின்,
வெரு வரு தோற்றத்து, அஞ்சா, வெஞ்சின, அவுணன், மேரு
அருவரை ஒத்தான்; அண்ணல், அல்லவை எல்லாம் ஒத்தான்.

பொருள் · Meaning in Tamil

இருவரும் பொருந்தப் பற்றி- (நரசிங்கப் பிரானும் இரணியனும் ஆகிய) இருவரும் ஒருவருடன் மற்றவர் பொருந்தும் படி கட்டிப் பிடித்துக் கொண்டு; எவ்வுலகுக்கும் மேல் ஆய் - எல்லா உலகங்களுக்கும் மேலாக, ஒருவரும் காணாவண்ணம் - எவரும் காண இயலாதபடி; உயர்ந்ததற்கு உவமை கூறின் - உயர்ந்து சென்றதற்கு உவமை கூறுவதானால், வெருவரும் தோற்றத்து - பிறர் அஞ்சும்படியான தோற்றமுடைய; அஞ்சா வெஞ்சின அவுணன் - எவருக்கும் அஞ்சாத, கொடியசினம் கொண்ட இரணியன்; மேரு அருவரை ஒத்தான் - அரிய மேருமலையை ஒத்துக் காணப்பட்டான்; அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் - நரசிங்கப் பெருமான் மேரு அல்லாத வேறு எல்லா மலைகளையும் கடல்களையும் மற்றவைகளையும் போல விளங்கினான்.

பொருந்தப்பற்றி - ஒருவரோடொருவர் இறுகப் பிடித்து. அல்லவை எல்லாம் - மேருமலை அல்லாத பிறமலைகள், கடல்கள், அண்டங்கள் முதலிய பிற வெல்லாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The two gripped each other close; and if one were to find a likeness
  2. for how they rose above every world, out of all sight,
  3. the fearsome, fearless, fiercely raging demon was like
  4. the great mountain Mēru; the Lord was like everything else besides.

What the poem says

Locked together, the two fighters rise above all the worlds. Iraṇiyaṉ looks like Mount Mēru, the centre of the world. The Man-Lion is like everything else around it, the other mountains, the seas and the universes, which shows how far greater God is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iruvarum poruntap paṟṟi, ev ulakukkum mēl ām,
'oruvarum kāṇā vaṇṇam uyarntataṟku uvamai kūṟiṉ,
veruvarum tōṟṟattu, añcā, veñ ciṉa, avuṇaṉ, mēru
aru varai ottāṉ; aṇṇal, allavai ellām ottāṉ.