கம்பராமாயணம் 6379 · யுத்த 3.149

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆர்ப்பொலி முழக்கின் - ஆர்ப்பரிக்கும் ஒலியின் முழக்கத்தாலும்; வெவ்வாய்வள் உகிர்ப்பாரம் ஆன்ற - வெம்மையான விளிம்பை உடைய வெண்மையான நகங்களைப் பெரும் சுமையாக; ஏற்று அரும் கரத்தின் - ஏற்ற அரிய எண்ணற்ற கைகளை உடையதாலும்; பல்வேறு எறிதிரைப் பரப்பின் உற்ற - பலவேறு விதமானதாக மோதும் அலைப் பரப்பினை உடைய; பாற்கடல் பரந்து பொங்கி - பாற்கடலானது பரவிப் பொங்கி எழுந்து; பங்கயத்து ஒருவன் நாட்டின் - தாமரை மலரில் வசிக்கும் பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தின்; மேற்சென்றது ஒத்தான் மாயன் - மேலே சென்றதைப் போல மாயவன் விளங்கினான்; கனகனும் மேரு ஒத்தான் - அந்த இரணியனோ பாற்கடலால் சூழப்பட்ட மேருவை ஒத்துக் காணப்பட்டான்.

நரசிங்கத்தின் பெருமுழக்கத்துக்குக் கடலின் முழக்கமும், அப்பெருமானது எண்ணற்ற கைகளின் தொகுதிக்குக் கடலின் அலைப் பரப்பும் ஒப்பாயின.

"மாயன் முழக்கின், கரத்தின் என்று காரணம் கூறி, முழக்கமும், அலைகளும் உடைய பாற்கடல் பங்கயத்தொருவன் நாட்டின் மேற் சென்ற தொத்தான்" என்று கூறியது "ஏது உவமை" யாகும். இந்தப் பாடலின் முதலடி "ஆர்ப்பு" எனத் தொடங்க, அடுத்த அடிகளில் ஏற்று, மேற்சென்று, பாற்கடல் என்ற எதுகையுடையதாயிருப்பதால் ரகரம் ஆசாக வந்து இன எதுகையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the thunder of his roar, and his arms past bearing, burdened
  2. with sharp, hot-edged claws, the Wondrous One was like the sea of milk
  3. with its waves of many kinds dashing far and wide, swelling and rising
  4. above the land of the lotus-born one; and Kaṉakaṉ was like Mēru.

What the poem says

The Man-Lion is compared to the ocean of milk rising in flood above even Brahmā's world. His roar matches the ocean's roar, and his countless arms match its waves. Iraṇiyaṉ, held in the middle, is like Mount Mēru rising from that sea. The commentary names this a simile that gives reasons, and also remarks on the verse's rhyme.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ārppu oli muḻakkiṉ vev vāy vaḷ ukirp pāram āṉṟa
ēṟṟu aruṅ karattiṉ, palvēṟu eṟi tiraip parappiṉ uṟṟa,
pāṟkaṭal, parantu poṅkip paṅkayattu oruvaṉ nāṭṭiṉ
mēl ceṉṟatu ottāṉ māyaṉ; kaṉakaṉum mēru ottāṉ.