கம்பராமாயணம் 6381 · யுத்த 3.151
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுழற்றிய காலத்து - நரசிங்கப் பெருமான் இரணியனைச் சுழற்றிய அந்தக் காலத்திலே; இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி- அவ்விரணியன் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த குண்டலங்கள் காதுகளைவிட்டு நீங்கி, இற்று; கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன கிடந்த - (சுழற்றிய வேகத்தில்) கிழக்கிலும் மேற்கிலும் சென்று வீழ்ந்துகிடந்தன; இன்றும் அழல் தருகதிரோன் - இன்றும் வெப்பத்தை உமிழும் சூரியன்; தோன்றும் உதயத்தொடு - உதிக்கின்ற கீழ்த்திசையுடனே; அத்தமான - மறைகின்ற மேற்குத் திசையிலும்; நெடுமணிச் சுடரின் நீத்தம் - அக் குண்டலங்களில் பதித்த மணிகளின் ஒளி வெள்ளமே; காலை மாலை நிழல்தரும் - காலையும் மாலையும் (வானத்திலே) ஒளியைத் தருவனவாம்.
தூங்கு குண்டலங்கள் - காதுகளில் தொங்கிய குண்டலங்கள். காலையும் மாலையும் கிழக்கிலும் மேற்கிலும் காணப்படும் செந்நிறமான ஒளிக்குக் காரணம் இரணியன் குண்டலத்துச் செம்மணிச் சுடரே என்றார். இது தற்குறிப்பேற்ற வணி. நெடுமணி - சிறந்த மாணிக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he was whirled, his swinging earrings broke and flew off,
- rushing east and west, and fell and lay there; even today,
- at the dawn when the blazing sun appears and at its setting,
- the flood of light from those great gems gives its glow, morning and evening.
What the poem says
The force of the whirling breaks off Iraṇiyaṉ's earrings, which fly to the far east and the far west. The poet playfully suggests that the red glow of dawn and dusk is still the light of their rubies. The commentary calls this a fanciful attribution of cause.