கம்பராமாயணம் 6382 · யுத்த 3.152

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இனைய தன்மை போன்றன - இப்பெருமானுடைய இவ்வியல்புகள் இன்னாருடைய தன்மையை ஒத்தன; இனையது பொருவியது - இன்னது ஒரு பொருள் இவனை ஒத்தது; என்று - என வெல்லாம்; தான் தனி ஒருவன் தன்னை - ஒப்பற்ற தனிப் பெரும் தலைவனான அப்பெருமானை; உரை செயும் தரத்தினானோ - எவரும் எடுத்துக் கூறும் தரம் உடையவனோ பரமன்; வான் தரு வள்ளல் - தன்னடியவர்க்கு வைகுந்த வாழ்வைத் தந்தருளும் வள்ளலான பெருமானது; வெள்ளை வள் உகிர் - வெண்மை நிறமான கூரிய நகங்கள்; வயிர மார்பின் ஊன்றலும் - இரணியனது உறுதி வாய்ந்த மார்பிலே ஊன்றியவுடனே; உதிர வெள்ளம் - அவன் உடலிலிருந்து பெருகிய ரத்த வெள்ளம்; உலகம் எங்கும் பரந்துளது - எல்லா உலகங்களிலும் பரவுவதாயிற்று.

"தாமோதரனைத் தனிமுதல்வனை ஞானமுண்டவனை ஆமோதரம் அறிய ஒருவர்க்கு?" என்பது நம்மாழ்வார் (திருவாய் மொழி 2:7:12) அருளிச் செயல். நரசிங்கமாக வந்தவன் தனக்குவமையில்லாத தனித் தலைவனான திருமால் என்பதனை "தான் தனி ஒருவன்" என்றும், இன்னதன்மையன் என எவரும் கூற இயலாதவன் இறைவன் என்பதனை "போன்றன இனையதன்மை பொருவியது இனையது என்று உரை செயும் தரத்தினானோ" என்றும் கூறினார்.

'சரணமாகும் தன் தாள் அடைந்தார்க்கெலாம், மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்' என்ற திருவாய் மொழிக் கேற்க (9: 10: 5) "வான்தருவள்ளல்" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "His nature is like this; this is what resembles him" —
  2. is He, the one peerless Being, of a kind that words can describe?
  3. When the bounteous Lord who grants heaven pressed his white, sharp claws
  4. into that adamant chest, a flood of blood spread over all the world.

What the poem says

The poet stops to say that no one can describe God by comparing him to anything. Then the climax comes: the Lord, who gives heaven to his devotees, drives his claws into Iraṇiyaṉ's chest, and the blood floods the world. The commentary quotes Nammāḻvār's Tiruvāymoḻi on God being beyond all knowing and on his giving heaven to those who take refuge in him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'pōṉṟaṉa iṉaiya taṉmai; poruviyatu iṉaiyatu" eṉṟu
tāṉ taṉi oruvaṉ, taṉṉai uraiceyum tarattiṉāṉō?
vāṉ taru vaḷḷal veḷḷai vaḷ ukir vayira mārpiṉ
ūṉṟalum, utira veḷḷam parantuḷatu, ulakam eṅkum.