கம்பராமாயணம் 6384 · யுத்த 3.154

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முக்கணான் எண்கணானும், முளரி ஆயிரக் கணானும்,
திக்கண் ஆம் தேவரோடு முனிவரும், பிறரும், தேடிப்
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;
"எக்கணால் காண்டும் எந்தை உருவம்" என்று இரங்கி நின்றார்.'

பொருள் · Meaning in Tamil

முக்கணான் எண்கணானும் - மூன்று கண்களை உடைய சிவபிரானும் எட்டுக் கண்களை உடைய பிரமதேவனும்; முளரி ஆயிரம் கணானும் - தாமரை போன்ற ஆயிரம் கண்களை உடையவனான தேவேந்திரனும்; திக்கண் ஆம் தேவரோடு முனிவரும் பிறரும் - திசைகள் தோறும் சென்று திரிகின்ற தேவர்களும் முனிவரும் மற்றும் உள்ளவர்களும்; தேடிப் புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் - இரணியனுக்குப் பயந்து, தேடி வந்தாலும் அவர்கள் இருக்கும் நாடு எவருக்கும் தெரியாதபடி திரிந்தவர்கள்; புகுந்து மொய்த்தார்- (நரசிங்கத்தால் இரணியன் மாய்ந்தது தெரிந்து) வந்து திரண்டார்கள்; எந்தை உருவம் - எம் பெருமான் கொண்ட நரசிங்க வடிவத்தை; எக்கணால் காண்டும் - எந்தக் கண்களால் காண இயலும்?; என்று இரங்கி நின்றார் - என்று கூறி இரங்கி நின்றார்கள்.

திக்கு - கண் - திக்கண் - பலதிசைகள். சென்ற நாடு எதுவென, எவரும் அறியாதபடி திரிந்தனர் ஆதலின் 'புக்கநாடு அறிகுறாமல் திரிகின்றார்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The three-eyed one, the eight-eyed one, and the one with a thousand lotus eyes,
  2. with the gods of the quarters, the sages and the rest, who had been wandering
  3. so that none could tell the land where they had fled, now came in and thronged;
  4. "With what eyes can we behold our Father's form?" they stood, lamenting.

What the poem says

Vīṭaṇaṉ goes on with the story. Now that Iraṇiyaṉ is dead, the gods come out of hiding: Civaṉ with three eyes, Brahmā with four faces and eight eyes, and Intiraṉ with a thousand eyes, along with the gods of the directions and the sages. They had been wandering in fear, hiding where no one could find them. They crowd round the Man-Lion, but wonder how mere eyes can take in so vast a form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mukkaṇāṉ eṇkaṇāṉum, muḷari āyiram kaṇāṉum,
tikkaṇ ām tēvarōṭu muṉivarum, piṟarum, tēṭip
pukka nāṭu aṟikuṟāmal tirikiṉṟār, pukuntu moyttār;
"ek kaṇāl kāṇṭum entai uruvam" eṉṟu iraṅki niṉṟār.'