கம்பராமாயணம் 6385 · யுத்த 3.155
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நோக்கினார் முன் - நெருங்கிவந்து பார்த்துக் கொண்டு நின்ற தேவர் முனிவர் அனைவருக்கும் அவரவர்க்கு முன்னே; நோக்குறு முகமும் கையும் - பார்க்கத்தக்க முகமும், கைகளும்; ஆக்கையும் தாளும் ஆகி - திருமேனியும், கால்களுமாக ஆகி (தனித்தனியே காட்சிதந்ததோடு); எங்கணும் தானே ஆகி - எங்கும் நிறைந்திருப்பவன்தானே ஆகி; வாக்கினால் மனத்தினால் - வாக்கினால் கூற முடியாதவனாயும் மனத்தால் நினைக்க முடியாதவனாயும்; மற்று அறிவினால் அளக்கவாரா - மற்றும் அறிவாலும் உணர்ந்து அளந்தறிய இயலாதவனாகவும் உள்ள அப்பரமனாகிய; மேக்குயர் சீயம் தன்னை - மேலும் மேலும் உயர்ந்து விளங்கும் நரசிங்க மூர்த்தியின் பேருருவை; கண்டனர் வெருவுகின்றார் - கண்டு அஞ்சினார்கள்.
மனம், மொழிகளுக்கும், அறிவுக்கும் அளந்துணர இயலாத அப்பெருமானை எவ்வாறு காணமுடியும் என்று ஆவல் நிறைவேறியது. எனினும் சீற்றத் தோற்றமுடைய சிங்கப்பிரானைக் கண்டு அஞ்சினர். பரமனது நிலையை 'வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா மேக் குயர் சீயம்' என்றார். மேக்குயர் - மேலோங்கி உயர்ந்து வளர்ந்துள்ள. பரமனின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மை 'எங்கணும் தானேயாகி' எனப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before each and every one who looked, a face and hands,
- a body and feet appeared to be seen, and He himself was everywhere —
- the Lion towering ever higher, not to be measured by word, by mind, or by knowledge;
- they beheld him, and were afraid.
What the poem says
Each onlooker sees a face, hands, body and feet right in front of him, though the Lion also fills everything. The gods' wish to see the God who is beyond speech, thought and knowledge is fulfilled, but his fierce form fills them with fear.