கம்பராமாயணம் 6386 · யுத்த 3.156
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பல்லொடு பல்லுக் கெல்லை - நரசிங்கப் பெருமானுடைய ஒரு பல்லுக்கும் மற்றொரு பல்லுக்கும் எல்லை; ஆயிரம் காதப்பத்தி - ஆயிரம் காத தூரமாகும்; சொல்லிய வதனம் - கூறப்பட்ட அவரது திருமுகம்; கோடி கோடி மேல் - கோடியை கோடியால் பெருக்கியதற்கு மேலே அளவுடையதாக; விளங்கித் தோன்ற - விளங்கும்படி காட்சிதர; எல்லை இல் உருவிற்று ஆகி - எல்லை இல்லாத பேருருவம் உடையதாகி; இருந்ததை எதிர நோக்கி - இருந்ததனை எதிர் கொண்டு பார்த்து; அல்லி அம் கமலத்து அண்ணல் - அழகிய இதழ்களை உடைய தாமரையில் வீற்றிருப்பவனாய பிரமன்; அவன் புகழ் விரிப்பதானான் - அப்பெருமானது புகழை விரித்துப் புகழ்ந்து கூறலானான்.
பத்தி - தூரம். கோடி கோடி மேல் - கோடியைக் கோடியால் பெருக்கிய தொகை. நரசிங்கப் பெருமானின் ஒரு பல்லுக்கும் மற்றொரு பல்லுக்கும் இடையே உள்ள தூரம் ஆயிரம் காதம் என்றால், அந்தப் பற்களை உடைய முகம் - கை-கால் - திருமேனி எத்துணைப் பெரியன என்பதை ஊகித்து உணரலாம். எதிர் நோக்குதல் - நேருக்கு நேர் பார்த்தல். கமலத்து அண்ணல் - பிரமன். அல்லி - அக இதழ். விரிப்பதானான் - விரித்துப் பேசிப் போற்றுவான் ஆயினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The space from one tooth to the next was a thousand leagues;
- the face so described shone out vaster than crores upon crores;
- beholding before him that it had become a form without limit,
- the Lord of the lovely-petalled lotus began to unfold His praise.
What the poem says
The gap between two of the Man-Lion's teeth is a thousand leagues, so his whole face and body are beyond imagining. Brahmā, seated on his lotus, faces this boundless form and begins a hymn of praise, which fills the next several verses.