கம்பராமாயணம் 639 · பால 10.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தண் பூச் சேக்கை - குளிர்ந்த தாமரை ஆசனத்தையுடைய, புனிதனையே - தூய குணமுள்ள பிரமனை; பொரு ஏய்ந்த - ஒத்துள்ளவனும்; கேண்மை - எல்லாரிடத்திலும் நட்புடையவனுமான; சதானந்தன் என்று உரை - சதானந்தன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற; வாய்ந்த மா தவன் - பெருமுனிவனது; மாமுகம் நோக்கி - சிறந்த திருமுகத்தைப் பார்த்து; நூல் தோய்ந்த - கலைகளிலே ஆழ்ந்த; சிந்தையின் கௌசிகன் - மனத்தையுடைய விசுவாமித்திரன்; சொல்லுவான் - (பின் வருமாறு) சொல்ல முற்படுவான்.
முனிவனுக்குப் பிரமன் உவமை: 1. வேதம் ஓதுவதில். 2. நல்லொழுக்கத்தில். 3. பெருந்தவமுடைமையில். 4. பிராமணர்க்குத் தலைமை பூணுவதில். சதானந்தன்: மிகுதியான ஆனந்தத்தை உடையவன். நூல் தோய்ந்த சிந்தை: அனைத்துக் கலைகளையும் முழுவதும் உணர்ந்த மனம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at the great face of the great ascetic
- renowned by the name Catāṉantaṉ, rich in friendship,
- who equalled the Pure One seated on the cool flower,
- Kaucikaṉ, his mind steeped in learning, spoke.
What the poem says
Vicuvāmittiraṉ replies to Catāṉantaṉ's welcome. Catāṉantaṉ is compared to Brahmā, the pure god seated on the cool lotus, for his Vedic learning, his conduct, his austerity and his leadership among brahmins. His name means "one of great bliss".
Vicuvāmittiraṉ is described as a mind immersed in all the sciences.