கம்பராமாயணம் 6405 · யுத்த 3.175
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாம மறை - புகழ் மிகுந்த நான்கு வேதங்களையும்; ஓதாது ஓதி- முறையாக ஆசிரியனை அடைந்து பயிலாது, இறையருளால் தானே பயின்று; நனி உணர்ந்தான் - மிக நன்றாக உணர்ந்தவனான பிரகலாதன்; தேமன் உரிமை புரிய- தேவர்களுக்கு மன்னனான இந்திரன் முடி சூட்டு விழாவுக்குரிய பணிகளைப் புரிய; திசை முகத்தோன் - நான்கு திசைக்கும் உரிய நான்கு முகங்களை உடையபிரமன்; ஓமம் இயற்ற - விழாவுக்கான வேள்வியைச் செய்ய; உடையான் முடிசூட்ட - எல்லா உலகங்களையும் உடையவனாகிய சிங்கப்பிரான் (திருமால்) தனது திருக்கரத்தால் மணிமுடிசூட்ட; கோமன்னவன் ஆகி மூவுலகும் கைக் கொண்டான் - சக்கரவர்த்தியாகி மூன்றுலகங்களும் தனக்கே உரியதாகக் கைக் கொண்டு ஆட்சி செய்தான்.
வேதங்கள் புகழ் மிகுந்தவை யாதலின் 'நாமமறை' என்றார். நாமம் - புகழ். இறையருளால் தானே ஓதி நன்குணர்ந்தவன் என்பதை 'ஓதாது ஓதி நனிஉணர்ந்தான்' என்றார். தே மன் - தேவர்தலைவன். உலகம் முழுதுடையான் உவந்து முடிசூட்ட மூவுலகுக்கும் உரிமையுடையவனாய் ஆட்சி செய்தான் என்பதால் கோமன்னவனாகி மூவுலகும் கைக் கொண்டான் என்றார். கோமன்னவன் - அரசர்க்கு அரசன் (சக்கரவர்த்தி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king of the gods performed the rites of right, the four-faced one
- tended the sacred fire, and the Lord of all set the crown upon him;
- he became king of kings and took the three worlds into his keeping —
- he who, without study, had learned the Vedas of renown and known them fully.
What the poem says
Pirakalātaṉ is crowned with great ceremony. Intiraṉ, king of the gods, attends to the rites, Brahmā performs the fire sacrifice, and Tirumāl himself places the crown on his head. He becomes emperor of the three worlds. The poet recalls again that he mastered the Vedas by God's grace, not by study.