கம்பராமாயணம் 6406 · யுத்த 3.176

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம் பெருமான்! என் மாற்றம்
யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி திண்ணம்''எனச் செப்பினான்,
மேதாவிகட்கு எல்லாம் மேலாய மேன்மையான்.

பொருள் · Meaning in Tamil

மேதாவிகட்கு எல்லாம் - அறிஞர்களுக்கெல்லாம்; மேலான மேன்மையான் - மேம்பட்ட மேலோனாகிய வீடணன்; ஈது ஆகும் முன் நிகழ்ந்தது - முன்பு நிகழ்ந்த இரணியன் கதை இதுவாகும்; எம்பெருமான் - எமது தலைவனே!; என் மாற்றம் யாதானும் - என்னுடைய பேச்சு எதுவாயினும்; ஆக நினையாது இகழ்தியேல் - உனது நன்மைக்காவது என்று நினைக்காமல் இகழ்வாயானால், தீதாய் விளைதல்- தீமை உண்டாவது; நனி திண்ணம் - மிகவும் உறுதியாகும்; எனச் செப்பினான் - என்று கூறினான்.

"நான் சொல்லும் உரை எதுவாயிருந்தாலும் உனக்கு நன்மை தருவதாகும் என்று நினைக்காமல் இகழ்ந்து ஒதுக்குவாய் என்றால் தீமையாகவே முடியும்" என்பான் "தீதாய் விளைதல் நனி திண்ணம்" என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "This is what happened long ago. My lord! If you scorn my words,
  2. not thinking them meant for your good in any way,
  3. it is quite certain that evil will come of it," he said —
  4. he whose eminence surpassed all the wise.

What the poem says

Vīṭaṇaṉ ends the story of Iraṇiyaṉ and Pirakalātaṉ. He warns his brother Irāvaṇaṉ that if he dismisses this advice instead of seeing that it is meant for his good, ruin is certain. The point of the story is clear: Irāvaṇaṉ, like Iraṇiyaṉ, is defying Tirumāl, who has come again as Irāmaṉ. This verse closes the episode called the Slaying of Iraṇiyaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ītu ākum, muṉ nikaḻntatu; emperumāṉ! eṉ māṟṟam
yātāṉum āka niṉaiyātu, ikaḻtiyēl,
tītu āy viḷaital naṉi tiṇṇam'' eṉac ceppiṉāṉ,
mētāvikaṭku ellām mēlāṉa mēṉmaiyāṉ.