கம்பராமாயணம் 6407 · யுத்த 4.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கேட்டனன் இருந்தும் - வீடணன் கூறிய அறிவுரைகளை எல்லாம் இராவணன் கேட்டவனாயிருந்தும், அக்கேள்வி தேர்கலா - அக்கேள்விப் பொருளைத் தேர்ந்தறியாத; கோட்டிய சிந்தையான் - நேர்மையின்றிச் சென்ற மனமுள்ளவனாதலால்; உறுதி கொண்டிலன் - வீடணன் கூறியவை தனக்குறுதி பயப்பதாகக் கொண்டிலன் ஆதலால்; மூட்டிய தீ என - நன்கு மூட்டப்பட்டு எரிகின்ற தீயைப் போல; முடுகிப் பொங்கினான்- விரைந்து வெகுண்டான்; ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய - உருகிய அரக்கு ஊட்டப்பட்டது போலச் சிவந்த; ஒண்கணான் - ஒளிமிக்க கண்களை உடையவனாயினான்.
கோட்டிய - கோடுதலைஉடைய (நேர்மையில்லாத). மூட்டிய - மூட்டப்பட்ட. உருகிய அரக்கு ஊட்டப்பட்டது போன்ற சிவந்த கண்களை உடையவன் என்பதனை 'ஊட்டரக் கூட்டிய அனைய ஒண்கணான்' என்றார். முடுகுதல் - விரைதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though he heard it all, he could not grasp what he had heard;
- with a crooked mind, he took none of it as counsel for his good;
- like a kindled fire he swiftly flared up in rage,
- his bright eyes red as though steeped in molten lac.
What the poem says
This begins the episode of Vīṭaṇaṉ's taking refuge with Irāmaṉ. Irāvaṇaṉ has heard his brother's whole story, but his twisted mind cannot see its meaning or accept it as good advice. He blazes up in anger, his eyes as red as molten lac.