கம்பராமாயணம் 6408 · யுத்த 4.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மரணம் என்று ஒரு பொருள்- (சினந்த ராவணன் வீடணனைப் பார்த்து) மரணம் என்ற சொல்லின் பொருளையே, மாற்றும் வன்மையோய் - மாற்றிய வலிமை உடையவனே!; இரணியன் என்பவன்- இரணியன் என்ற பெயர் கொண்ட அவன்; எம்மனோரினும் முரணியன் - எம்மைப் போன்றவரினும் வலிமைமிக்கவன்; அவன் தனை முருக்கி- அத்தகைய அவனைக் கொன்று; முற்றினான் அரணியன் என்று - தீர்த்தவன் நமக்கு பாதுகாப்பானவன் என்று; அவற்கு அன்பு பூண்டனை - அந்தத்திருமாலுக்கு அன்பு கொண்டு வாழ்வாயாயினை.
இலங்கைப் போரில் பங்கு பெறாமல் உயிர் பிழைக்க வீடணன் நினைப்பதாக எண்ணுவதை 'மரணம்... மாற்றும் வன்மையோய்' என்ற தொடர் குறிக்கிறது. அரணியன் - பாதுகாப்பவன். முருக்கி முற்றுதல் - கொன்று தீர்த்தல். எம்மனோர் - எம்மைப் போன்றவர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Iraṇiyaṉ was mightier than the likes of us;
- he who crushed him and finished him off
- is a protector," so you think, and have set your love on him —
- you who would change the very meaning of the thing called death!"
What the poem says
Irāvaṇaṉ turns on Vīṭaṇaṉ with sarcasm. He accuses him of loving Tirumāl because Tirumāl killed the mighty Iraṇiyaṉ, as if he were a protector. Calling Vīṭaṇaṉ one who "would change the meaning of death" means he hopes to escape death by staying out of the war.