கம்பராமாயணம் 6409 · யுத்த 4.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்
ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ
பொருள் · Meaning in Tamil
ஆயவன் - நீ கூறிய அத்தகையவனான பிரகலாதன்; வளர்த்த தன் தாதை யாக்கையை - தன்னைப் பெற்று வளர்த்த தந்தையான இரணியனது உடலை; மாயவன் பிளந்திட - மாயச் செயல்களை உடைய திருமால் பிளந்து வதைக்க; மகிழ்ந்த மைந்தனும் - அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த மகனான அப்பிரகலாதனும்; ஏயும் நம் பகைஞனுக்கு - பொருந்திய நமது பகைவனான இராமனுக்கு; இனிய நண்பு செய் நீயுமே நிகர் - இனிய நட்புள்ளவனாகிய நீயுமே சமமானவர்கள்; பிறர் நிகர்க்க நேர்வரோ - மற்றவர் எவரும் சமமாவார்களோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "That son who rejoiced when the Wondrous One tore open
- the body of the father who had raised him —
- he alone is your equal, you who keep sweet friendship with our foe;
- could any other ever come near to equalling you?"
What the poem says
Irāvaṇaṉ turns the story against Vīṭaṇaṉ. Pirakalātaṉ rejoiced when his father was torn apart, and Vīṭaṇaṉ, who is friendly with their enemy Irāmaṉ, is just like him. No one else could match such disloyalty.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āyavaṉ vaḷartta taṉ tātai yākkaiyai
māyavaṉ piḷantiṭa makiḻnta maintaṉum
ēyum nam pakaiñaṉukku iṉiya naṇpu cey
nīyumē nikar; piṟar nikarkka nērvarō