கம்பராமாயணம் 6410 · யுத்த 4.4

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாழிசால் இரணியன் புதல்வன் பண்பு எனச்
சூழ் வினை முற்றி யான் அவர்க்குத் தோற்ற பின்
ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்திப் பின்
வாழவோ கருத்து? அது வர வற்று ஆகுமோ?

பொருள் · Meaning in Tamil

பாழிசால் இரணியன் - வலிமைமிக்க இரணியனுடைய; புதல்வன் பண்பு என- புதல்வனான பிரகலாதனுக்குரிய குணத்தைப் போல; சூழ்வினை முற்றி - சூழ்ச்சியை நிறைவேற்றி முடித்து; (அதனால்) யான் அவர்க்குத் தோற்றபின் - நான் அந்த மனிதனுக்குத் தோல்வியடைந்தபின்பு; ஏழை நீ என் பெருஞ்செல்வம் எய்தி - இப்போது அறிவிலியாகிய நீ எனது பெரிய இலங்கையின் ஆட்சிச் செல்வத்தை அடைந்து; பின் வாழவோ கருத்து - பின்னர் அரசனாக வாழலாம் என்பதோ உனது கருத்து?; அது வர வற்று ஆகுமோ - அது நடக்கக் கூடிய காரியம் ஆகுமோ?

பாழி- வலிமை. வரவற்று - நிகழக் கூடியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Like the nature of the son of mighty Iraṇiyaṉ,
  2. once you have carried out your plot, and I have fallen to them,
  3. you fool, is it your thought to seize my great wealth
  4. and live on? Is that a thing that could ever come to pass?"

What the poem says

Irāvaṇaṉ accuses his brother of plotting his defeat so that he can rule Laṅkā afterwards, just as Pirakalātaṉ came to rule after his father's death. He mocks the idea as something that will never happen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāḻi cāl iraṇiyaṉ putalvaṉ paṇpu eṉa
cūḻviṉai muṟṟi yāṉ avarkkut tōṟṟapiṉ
ēḻai nī eṉ peruñ celvam eyta piṉ
vāḻavō karuttu? atu vara vaṟṟu ākumō?