கம்பராமாயணம் 6411 · யுத்த 4.5

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முன்புற அனையர்பால் நண்பு முற்றினை;
வன்பகை மனிதரின் வைத்த அன்பினை;
என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;
உன்புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ?

பொருள் · Meaning in Tamil

முன்புற அனையர் பால் - இதற்கு முன்னேயே நீ அந்த மனிதர்களிடம்; அன்பு பூண்டனை - அன்பு பூண்டவனாய் இருந்தாய்; வன் பகை மனிதரின் - நமது வலிய பகைவர்களான அந்த மானிடர்களிடத்தில்; வைத்த அன்பினை - வைக்கப்பட்ட அன்புடையவனாக இருக்கிறாய்; என்புற உருகுதி அழுதி ஏத்துதி - எலும்பும் உருகும்படி அவர்களை நினைந்து உள்ளம் உருகுகிறாய் அழுகிறாய், துதிக்கிறாய்; உன்புகல் அவர் - உனக்குப் புகலிடம் அவர்களே என்றால்; பிறிது உரைக்க வேண்டுமோ - வேறு சொல்ல வேண்டுமோ?

முன்புற - முன்னதாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even before this you were full of love for them;
  2. you have set your love on those men, our bitter foes;
  3. you melt to the bone, you weep, you sing their praise;
  4. they are your refuge — need anything more be said?"

What the poem says

Irāvaṇaṉ claims that Vīṭaṇaṉ has long been devoted to Irāmaṉ and Ilakkuvaṉ, his enemies. He weeps, melts with love and praises them. If they are his refuge, there is nothing more to say.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṉpuṟa aṉaiyarpāl aṉpu muṟṟiṉai;
vaṉ pakai maṉitariṉ vaitta aṉpiṉai;
eṉpu uṟa urukuti; aḻuti; ēttuti;
uṉ pukal avar; piṟitu uraikka vēṇṭumō?