கம்பராமாயணம் 641 · பால 10.89

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்று கோசிகன் கூறிட - என்று விசுவாமித்திரன் சொன்ன அளவில்; ஈறு இலா - எல்லையற்ற; வன் தபோதனன் - கடுந்தவத்தையுடையவனான சதானந்த முனிவன்; மாதவ - (விசுவாமித்திரனை நோக்கி) மிக்க தவமுடையவரே; நின் அருள் - உமது கருணை; இன்று உளதேல் - (இக்குமரர்களிடம்) இப்பொழுது இருப்பதனால்; இந்த வென்றி வீரர்க்கு - வெற்றி வீரராகிய இந்த இராம லக்குவர்க்கு; அரிது - செய்யமுடியாத அருஞ்செயல்; யாது - என்ன இருக்கின்றது (ஒன்றுமில்லை); எனவும் விளம்பி - என்றும் கூறி; மேல் - மேலும்;

தபோதனன்: யாவரும் செல்வத்தை விரும்பிப் பாதுகாப்பது போலத் தன் தவத்தை விரும்பிப் பாதுகாக்கும் முனிவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When Kōcikaṉ had said this, the stern ascetic of boundless penance
  2. said, 'Great sage, if your grace
  3. is with them now, what is there too hard
  4. for these victorious heroes?' — and then, further,

What the poem says

Catāṉantaṉ answers modestly that with Vicuvāmittiraṉ's grace upon them, nothing could be too hard for these two victorious princes. The verse runs on into the next ones, where Catāṉantaṉ turns to Irāmaṉ.

An ascetic is called one whose wealth is penance: he guards it as others guard riches.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu kōcikaṉ kūṟiṭa, īṟu ilā
vaṉ tapōtaṉaṉ,' mā tava! niṉ aruḷ
iṉṟutāṉ uḷatēl, aritu yātu inta
veṉṟi vīrarkku' eṉavum viḷampi mēl.