கம்பராமாயணம் 6416 · யுத்த 4.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றலும் இளவலும் எழுந்து வான் இடைச்
சென்றனன் துணைவரும் தானும் சிந்தியா
நின்றனன்; பின்னரும் நீதி சான்றன
ஒன்று அல பல பல உறுதி ஓதினான்.
பொருள் · Meaning in Tamil
என்றலும் இளவலும் எழுந்து- என்று இராவணன் கூறவும் அவன் தம்பியான வீடணன் உடனே எழுந்து; வானிடைச் சென்றனன் - வானத்தின் இடையே சென்றான்; துணைவரும் தானும்- தன் அமைச்சர்களும், தானுமாக; சிந்தியா நின்றனன் - என்ன செய்வதெனச் சிந்தித்து நின்றான்; பின்னரும் - வானில் எழுந்து நின்ற பிறகும்; நீதி சான்றன - நீதியுடன் அமைந்த உறுதியுரைகள்; ஒன்றல பலப்பல - ஒன்றல்லாதனவான பலவற்றை; உறுதி ஓதினான் - இராவணனுக்கு உறுதி பயப்பனவாகக் கூறினான்.
துணைவர் - அமைச்சர் நால்வர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At this the younger brother rose up into the sky
- and went; he and his companions stood there, pondering;
- and even then, not one but many counsels,
- full of justice, he spoke for his brother's good.
What the poem says
Banished by Irāvaṇaṉ, Vīṭaṇaṉ rises into the air with his four ministers. He stays there for a while, unsure of his next step, and even so he goes on giving his brother wise advice for his own good.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum iḷavalum eḻuntu vāṉiṭaic
ceṉṟaṉaṉ tuṇaivarum tāṉum cintiyā
niṉṟaṉaṉ; piṉṉarum nīti cāṉṟaṉa
oṉṟu ala palappala uṟuti ōtiṉāṉ.