கம்பராமாயணம் 6417 · யுத்த 4.11

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வாழியாய்! கேட்டியால்; வாழ்வு கைம் மிக
ஊழி காண்குறும் நினது உயிரை ஓர்கிலாய்
கீழ்மையோர் சொற் கொடு கெடுதல் நேர்தியோ?
வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ?

பொருள் · Meaning in Tamil

வாழியாய் கேட்டியால் - அண்ணலே வாழி! யான் கூறுவதைக் கேட்பாயாக, வாழ்வு கைம் மிக- உனது வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்பட; ஊழி காண்குறும் - ஊழிக் காலத்தின் எல்லையைக் காணஉள்ள; நினது உயிரை ஓர்கிலாய் - உனது உயிரின் சீர்மையை எண்ணாதிருக்கிறாய்; கீழ்மையோர் சொற்கொடு - கீழ்மக்களின் சொல்லைக் கேட்டு; கெடுதல் நேர்தியோ - கேட்டை அடைய முற்படுகிறாயா?; அறம் பிழைத்தவர்க்கு - அறநெறிகளைவிட்டு தவறி நடந்தவர்க்கு; வாழ்மைதான் வாய்க்குமோ - நல்ல வாழ்க்கை அமையுமோ?

கைம்மிக - மேம்பட. ஓர்தல் - ஆய்ந்தறிதல். வரத்தால் பெற்ற வாழ்வை நினைத்துப் பார்க்க வேண்டாமா? என்பான் 'ஓர்கிலாய்' என்றான். வாழ்மை - வாழ்க்கை. "அறநெறி பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்ற சிலப்பதிகாரம் சிந்திக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Long may you live! Listen: so that your life may flourish,
  2. you do not weigh the worth of your own life, meant to see the end of ages;
  3. will you take the words of base men and go to ruin?
  4. Can a good life ever come to those who stray from dharma?"

What the poem says

Vīṭaṇaṉ pleads once more. Irāvaṇaṉ's boons have given him a life meant to last through ages, and he is throwing it away by listening to flatterers. Those who abandon righteousness cannot prosper. The commentary quotes the Cilappatikāram: to those who stray from dharma, dharma itself becomes death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāḻiyāy! kēṭṭiyāl; vāḻvu kaimmika
ūḻi kāṇkuṟu niṉatu uyirai ōrkilāy
kīḻmaiyōr coṟkoṭu keṭutal nērtiyō?
vāḻmaitāṉ aṟam piḻaittavarkku vāykkumō?