கம்பராமாயணம் 6419 · யுத்த 4.13

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எத்துணை வகையினும் உறுதி எய்தின
ஒத்தன உணர்த்தினேன்; உணர கிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்து அருளுவாய் எனா
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.

பொருள் · Meaning in Tamil

எத்துணை வகையினும்- எத்தனை எத்தனை வகையுண்டோ அத்தனை வகையிலும்; உறுதி எய்தின ஒத்தன - உனக்கு உறுதி பயப்பதற்கொத்த நீதிகளை; உணர்த்தினேன்; உணர கிற்றிலை - எடுத்துக்கூறி உணர்த்தினேன்; நீ உணர்ந்தாயல்லை; அத்த! என் பிழை பொறுத்து அருளுவாய் என - எனது தந்தை போன்றவனே! இதுவரை நான் ஏதேனும் பிழை செய்திருந்தால் அவைகளை எல்லாம் பொறுத்து அருள் வாயாக (என்று கூறிவிட்டு); உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான் - நல்ல குணங்களை உடைய உத்தமனாகிய வீடணன் அந்த இலங்கை நகரத்தை விட்டு நீங்கிச் சென்றான்.

அத்தன் - தந்தை (இங்கு இராவணனைத் தந்தை போலவே வீடணன் கருதியவன் என்பது புலப்படுகிறது). ஒத்தன - அறத்துக்குப் பொருந்துவனவான நீதிகள்.

வீடணன் இராவணனுக்குக் கூறிய நீதிகள் யாவும் இராவணனுக்கு நன்மை பயப்பன. 'சில புகலுதல் ஒழி' என்று வெறுத்துரைத்த இராவணனுக்கு மேலும் உறுதி உரைத்தமையால் 'பிழை பொறுத்தருள்வாய்' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "In every way there is, I have set before you counsels
  2. fit to bring you good; you would not understand;
  3. my father, forgive my faults" — saying this,
  4. the noble one left that city behind him.

What the poem says

His advice rejected, Vīṭaṇaṉ asks his elder brother, whom he honours as a father, to forgive any offence he has given by speaking after being told to be silent. Then he leaves Laṅkā for good.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ettuṇai vakaiyiṉum uṟuti eytiṉa
ottaṉa uṇarttiṉēṉ; uṇarakiṟṟilai;
atta! eṉ piḻai poṟuttaruḷuvāy eṉa
uttamaṉ an nakar oḻiyap pōyiṉāṉ.