கம்பராமாயணம் 6420 · யுத்த 4.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும் - அனலன், அனிலன், அரன், சம்பாதி என்ற; வினையவர் நால்வரும் - நல்வினை உடைய நான்கு பேரும்; விரைவில் வந்தனர் - விரைந்து வீடணனிடம் வந்தனர்; கனை கழல் காலினர்- வீரக் கழல் அணிந்த கால்களை உடையவர்களும்; கருமச் சூழ்ச்சியர் - ஆராய்ந்து செயல்படும் தகுதி உடையவர்களும்; இனைவரும் - ஆகிய இத்தகைய அவர்கள்; வீடணனோடும் ஏயினர் - வீடணனுடன் சேர்ந்து கொண்டனர்.
ஆராய்ந்து செயல்படத்தக்க நற் பண்பு கொண்டவர்கள் என்பதால் 'கருமச் சூழ்ச்சியர்' என்றார்.
அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நால்வரும் வீடணனுடைய அமைச்சர்கள். வீடணன் இலங்கை விட்டுப் போன போதும் அவனை விட்டுப் பிரியாதவர்களாக, அவனுடன் சேர்ந்து கொண்டனர் என்பதனை 'வீடணனோடும் ஏயினார்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Aṉalaṉ, Aṉilaṉ, Araṉ and Campāti,
- the four of righteous deeds, came swiftly;
- with ringing anklets on their feet, men skilled in weighing what should be done,
- these four joined themselves to Vīṭaṇaṉ.
What the poem says
Vīṭaṇaṉ's four ministers, Aṉalaṉ, Aṉilaṉ, Araṉ and Campāti, are warriors and wise counsellors who know how to plan action. They stay loyal to him and join him as he leaves Laṅkā.