கம்பராமாயணம் 6422 · யுத்த 4.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அளக்கரைக் கடந்து - அந்தக் கடலைக் கடந்து வடகரையை அடைந்து; மேல் அறிந்து - மேலே நடந்ததனை அறிந்து (முன்பு நடந்தது); நம்பியும் - இளவலாகிய வீடணனும்; விளக்கொளி பரத்தலின் - கடற்கரை முழுதும் விளக்குகளின் ஒளிபரந்திருப்பதால்; பாலின் வெண் கடல் - வெண்மை நிறமான பாற்கடல் மீது; வளத்தடந்தாமரை - அழகிய அகன்ற செந்தாமரை மலர்கள்; மலர்ந்தாம் என - மலர்ந்துள்ளது போல (காட்சிதந்த); களப்பெரும் தானையை - போர்க்களத்துக்குச் செல்லும் அந்தப் பெரிய வானரப் படையை; கண்ணின் நோக்கினான் - கண்களால் பார்த்தான்.
அளக்கர்- கடல். வளம் - அழகு. கடலைக் கடந்து, வட கரையை அடைந்த வீடணன் முன்பு நடந்ததை அறிந்து. பாற்கடலிலே தாமரை மலர்ந்தது போல, வெண்மை நிறம் உடைய வானரப் படை தங்கியுள்ள அவ்விடத்திலே விளக்கொளிபரவியிருத்தலைத் தனது கண்களால் பார்த்தான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Crossing the sea and learning what had taken place, the noble one
- beheld with his own eyes the vast army, ready for battle,
- which, with lamplight spreading across it, seemed like
- rich, broad lotuses in bloom upon the white sea of milk.
What the poem says
Vīṭaṇaṉ flies over the sea and sees the monkey army camped on the shore. Lamps glow across the pale mass of monkeys, and to him it looks like red lotuses blooming on the white ocean of milk.