கம்பராமாயணம் 6424 · யுத்த 4.18

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அறம் தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனன்;
மறந்தும் நன்புகழ் அலால் வாழ்வு வேண்டலன்;
பிறந்த என் உறுதி நீ பிடித்தியால்'எனத்
துறந்தனன்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான்.

பொருள் · Meaning in Tamil

அறம் தலை நின்றவர்க்கு - அற நெறியிலே தலைசிறந்து விளங்கும் அந்த இராம, இலக்குவர்களிடம்; அன்பு பூண்டனென் - நான் மிக்க அன்புடையவனானேன்; நல்புகழ் அல்லால்- நல்ல புகழ் அல்லாமல்; மறந்தும் வாழ்வு வேண்டலென் - மறந்தும் கூட உயிர் வாழ்தலை விரும்பமாட்டேன்; பிறந்த என் உறுதி - (இராவணன்) என்னுடன் பிறந்த எனக்கு நன்மையான உறுதி தருபவைகளை; நீ பிடிக்கலாய் என - நீகடைப்பிடிக்காதவனா யிருக்கிறாய் என்று கூறியதால்; துறந்தனென்- இராவணனை விட்டு நீங்கினேன்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான்- இனி, நான் செய்ய வேண்டிய நற்செயல் என்னவென்று கூறுங்கள் என, வீடணன் தனது அமைச்சர் நால்வரைக் கேட்டான்.

"புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" என்று புறப்பாடலும் (புறநா. 182) "உயிரை விற்றுறு புகழ் பெற உழல்பவர்" என்ற பரணியும், (கலிங்கத்துப் பரணி 340) என்ற உரைகளை ஒப்பிடுக. கலிப் பகையாரை 'உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்' என்று சேக்கிழார் (திருநாவுக். 30) கூறுவதும் நினையத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I have given my love to those who stand foremost in dharma;
  2. even in forgetfulness I would not want a life without good fame;
  3. since he said, 'You will not hold to the counsel of me, your own brother,'
  4. I have renounced him; now tell me what I should do," he said.

What the poem says

Vīṭaṇaṉ speaks to his four ministers. His heart is with Irāmaṉ and Ilakkuvaṉ, who stand for righteousness, and he would rather die than live without honour. Since Irāvaṇaṉ has rejected his advice, he has left him. Now he asks them what to do next. The commentary cites Puṟanāṉūṟu and other works that praise people who give up life itself for good fame.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟamtalai niṉṟavarkku aṉpu pūṇṭaṉeṉ;
maṟantum naṉ pukaḻ alāl vāḻvu vēṇṭaleṉ;
piṟanta eṉ uṟuti nī piṭikkalāy' eṉāt
tuṟantaṉeṉ; iṉic ceyal colluvīr eṉṟāṉ.