கம்பராமாயணம் 6425 · யுத்த 4.19

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாட்சியில் பொருள் தரும் - தாழ்ச்சி இல்லாத மேலான ஞானத்தைத் தரும்; தரும மூர்த்தியை - அறமே வடிவமான இராமபிரானை; காட்சியே இனிக்கடன் - கண்டு தரிசிப்பதே இனி நமக்குரிய கடமை; மாட்சியின் அமைந்தது - மாண்பு பொருந்தியது (சிறப்புடையது); வேறு மற்று இலை - இதை விட வேறு எதுவுமில்லை; என்று, கல்வி சால் சூழ்ச்சியின் கிழவரும் - என்று, கல்விமிக்க ஆலோசனை கூறுவதில் வல்ல அமைச்சர்களும்; துணிந்து சொல்லினார்- தாம் எண்ணித் துணிந்த முடிவைக் கூறினர்.

தாழ்ச்சி, சூழ்ச்சி என்பன எதுகை நோக்கி தாட்சி, சூட்சி என வந்தன. சிறந்தது இராமனைத் தரிசிப்ப தொன்றே. அதை விடச் சிறந்தது வேறு எதுவுமில்லை என்பார் "தரும மூர்த்தியைக் காட்சியே இனிக்கடன் மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை" என்றனர். கல்வி மிக்கவர்கள் ஆலோசனைத் திறம் உடையவர்கள் என்பதால் அமைச்சர்களை "கல்வி சால் சூழ்ச்சியின் கிழவர்" என்றார். கிழவர் - உரிமை உடையவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Nothing else could be so fitting;
  2. to behold the very form of dharma, who grants the truth that knows no fall,
  3. is now our duty," said they, rich in learning
  4. and masters of counsel, with firm resolve.

What the poem says

The four ministers answer that their only duty now is to go and see Irāmaṉ, the embodiment of righteousness, who gives the highest wisdom. Nothing could be better.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māṭciyiṉ amaintatu vēṟu maṟṟu ilai;
tāṭci il poruḷ tarum taruma mūrttiyaik
kāṭciyē iṉik kaṭaṉ' eṉṟu kalvi cāl
cūṭciyiṉ kiḻavarum tuṇintu colliṉār.