கம்பராமாயணம் 6426 · யுத்த 4.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நல்லது சொல்லினீர்- (அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட வீடணன் நமக்கு நன்மையாவதொன்றையே நீங்கள் கூறினீர்கள்; நாமும் வேறினி அல்லது செய்துமேல் - நாமும் இராமபிரானைச் சென்று சேர்வதல்லாத வேறு செய்வோமாயின்; அரக்கர் ஆதுமால் - அரக்கத்தன்மையினர் ஆவோம், எல்லையில் பெருங் குணத்து - எல்லையில்லாத நல்ல குணங்களை உடையவனான; இராமன் தாளிணை புல்லுதும் - இராமபிரானுடைய திருவடி இணைகளைச் சேருவோம், புல்லி இப்பிறவி போக்குதும் - சேர்ந்து இந்தப் பிறவி நோயைப் போக்கிக் கொள்வோம்.
இராமபிரானைச் சென்று சேர்வதை விட்டு வேறு ஏதேனும் நாம் செய்வோமாயின் நாமும் அடாத செயல் செய்யும் அரக்கர்கள் ஆய்விட நேரிடும் என்றான். குணங்களால் உயர்ந்தவள்ளலான இராமனை "எல்லை இல் பெருங்குணத்திராமன்" என்றது, பிறப்பால் வந்த புன்மையைச் சார்பின் சிறப்பால் போக்குதற்கு வழி கண்டனன் ஆதலின்; 'இராமன் தாள் இணையைச் சார்ந்து இந்த அரக்கப் பிறவியை நீக்கிக் கொள்வோம்' என்றான். இனத்தான் ஆம் இன்னான் எனப் படுஞ் சொல் (குறள் 453) என்றதை நினைக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You have spoken well; if we should now do
- anything other than this, we would be rākṣasas indeed;
- we will cling to the twin feet of Irāmaṉ of boundless virtues,
- and, clinging there, we will be rid of this birth."
What the poem says
Vīṭaṇaṉ agrees. To do anything except go to Irāmaṉ would be to act like true demons. By taking refuge at Irāmaṉ's feet they will escape the lowness of their demon birth. The commentary notes that good company can overcome the faults of birth, and cites the Tirukkuṟaḷ on how a person is known by the company he keeps.