கம்பராமாயணம் 6427 · யுத்த 4.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முன்புறக் கண்டிலேன் - அந்த இராமபிரானை இதற்கு முன்பு நான் நேரில் பார்த்ததில்லை, கேள்வி முன்பிலேன் - அவனைப் பற்றி முன்பு கேள்விப்பட்டதுமில்லை; அன்புஉறக் காரணம் அறிய கிற்றிலேன் - அப்பெருமான் மீது அன்பு கொள்ளத் தக்க காரணம் எதுவும் அறிய முடியவில்லை; என்பு உறக் குளிரும் - என்பும் குளிர்கிறது; நெஞ்சு உருகும் - என்மனம் அவனை நினைந்து உருகுகிறது; அவன் புன்புறப் பிறவியின் பகைஞன் போலுமால் - அப்பெருமான் புல்லிய இந்தப் பிறவியை மாற்றவல்ல பிறவியின் பகைவன் போலும்.
முன்புற - இதற்குமுன்பு. புன்புறம் - புல்லியதாகிய உடம்பு. வீடணன், தான் இராம பிரானைக் கண்டதுமில்லை. அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை என்றான். ஆனால் அவனை நெருங்கநெருங்க நெஞ்சு உருகுகிறது; என்பும் குளிர்கிறது என்கிறான். எவரிடமும் பார்த்து, பழகித்தான் அன்பு செலுத்த இயலும். மாறாக இராமனிடம் அன்பு கொள்ளக் காரணம் தெரியவில்லை என்கிறான். அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பக்தியின் மெய்ப்பாடுகள் குறிக்கப்படுதல் காண்க. இறைவன் அடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (குறள் 10) என்ற கருத்தினைப் 'புன்புறப் பிறவியின் பகைஞன் போலுமால்' என்ற தொடர் நினைவூட்டுகின்றது. இராமபிரானை முதலிற் கண்டபோது 'என்பு எனக்கு உருகுகின்றது, இவர்கின்ற தளவு இல் காதல்' (3763) என்று அனுமன் கூறிய அனுபவச் சொற்கள் இங்கு நினையத்தக்கன. கண்ணப்பரின் நிலையும் இதுபோன்றதே (பெ. பு. 104)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I have never seen him before; never heard of him before;
- I cannot tell the reason for this love;
- I am cooled to the very bone; my heart melts; surely he
- is the enemy of this lowly birth in the flesh."
What the poem says
Vīṭaṇaṉ wonders at his own feelings. He has never met Irāmaṉ, yet as he comes nearer he feels a love he cannot explain: he is soothed to the bone and his heart melts. Such love, he concludes, can only come from one who frees souls from rebirth. The commentary compares Aṉumaṉ's words on first seeing Irāmaṉ, and the saint Kaṇṇappar's sudden devotion.