கம்பராமாயணம் 6428 · யுத்த 4.22

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அற
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும்
வேதியர் அருளும் நான் விரும்பிப் பெற்றனென்
போதுறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள்.

பொருள் · Meaning in Tamil

போது உறு கிழவனை - தாமரை மலரில் உறையும் பிரமனை நினைந்து; தவம் முன் பூண்ட நாள்- நான் முன்பு தவம் மேற்கொண்ட நாளிலே; ஆதி அம்பரமனுக்கு அன்பும் - உலகுக்கே ஆதியாக விளங்கும் பரம் பொருளிடம் அன்பும்; நல்லறம் நீதியின் வழாமையும் - நன்மை தரும் அறநெறியிலும் நீதி தவறாமல் நிற்றலும்; உயிர்க்கு நேயமும் - எல்லா உயிர்களிடமும் வேறு பாடில்லாத நேசமும்; வேதியர் அருளும் - வேதம் வல்ல சான்றோரின் கருணையும்; நான் விரும்பிப் பெற்றனென் - நான் விரும்பி பிரமனிடம் வரமாகப் பெற்றேன்.

பிரமனைக் குறித்துத் தவம் செய்த போது, உயிர்க்கு நேயம் ஆய எல்லா உயிர்களையும் நேசித்தல் (ஆன்ம நேயம் என்பர் ஜீவகாருண்யம்), வேண்டிப் பெற்றவரத்தின்படி வாழ்க்கை அமைந்ததென்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Love for the First, the Supreme; never swerving from good dharma and justice;
  2. love for all living things;
  3. and the grace of the Vedic sages — these I desired and gained
  4. on the day long ago when I did penance to the one who dwells in the flower."

What the poem says

Vīṭaṇaṉ recalls that long ago, when he did penance to Brahmā, the boons he asked for were love for the Supreme God, steadiness in righteousness, compassion for all creatures and the blessing of the sages. Those boons have shaped his life and now lead him to Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āti am paramaṉukku aṉpum nal aṟam
nītiyiṉ vaḻāmaiyum uyirkku nēyamum
vētiyar aruḷum nāṉ virumpip peṟṟaṉeṉ
pōtu uṟu kiḻavaṉait tavam muṉ pūṇṭa nāḷ.