கம்பராமாயணம் 6429 · யுத்த 4.23

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது;
தூயது நினைந்தது; தொல்லை யாவர்க்கும்
நாயகன் மலர்க்கழல் நணுகி நம்மனத்து
ஏயது முடித்தும்'என்று இனிது மேயினான்.

பொருள் · Meaning in Tamil

ஆயது பயப்பது - அந்த பிரமன் தந்தவரம் நன்மை தருதற்குரிய; ஓர் அமைதி ஆயது - ஒரு நல்லகாலம் ஆயிற்று; நினைந்தது தூயது - நீங்கள் நினைந்து கூறியதே தூய்மையானது; தொல்லை யாவர்க்கும் நாயகன் - பழமையான, எல்லோருக்கும் தலைவனான இராமபிரானது; மலர்க்கழல் நணுகி - மலர் போன்ற பாதங்களை அடைந்து; நம் மனத்து ஏயது முடித்தும் - நமது மனத்துக்குப் பொருந்தியதனைச் செய்து முடிப்போம், என்று இனிது மேயினான் - என்று கூறி இனிதே இருந்தான்.

ஆயது - அந்தப் பிரமன் தந்த வரம். ஓர் அமைதி - ஒரு தகுந்த சமயம். தொல்லை நாயகன் யாவர்க்கும் நாயகன் எனக் கூட்டி உணர்க. தொல்லை - பழமை. ஏயது - பொருந்தியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The time has come for that boon to bear its fruit;
  2. what you have resolved is pure; drawing near to the flower-feet
  3. of the ancient Lord of all,
  4. we will accomplish what our hearts are set upon" — and he rested, content.

What the poem says

Vīṭaṇaṉ sees that the moment has come for Brahmā's old boon to bear fruit. He praises his ministers' advice and resolves to go to the feet of Irāmaṉ, Lord of all, then rests in peace of mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āyatu payappatu ōr amaiti āyatu;
tūyatu niṉaintatu; tollai yāvarkkum
nāyakaṉ malarkkaḻal naṇuku nam maṉattu
ēyatu muṭittum' eṉṟu iṉitu mēyiṉāṉ.