கம்பராமாயணம் 6430 · யுத்த 4.24

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இருளுற எய்துவது இயல்பு அன்றாம்'என
பொருள் உற உணர்ந்த அப் புலன்கொள் புந்தியார்
மருள் உறு சூழலின் மறைந்து வைகினார்;
உருளுறு தேரவன் உதயம் எய்தினான்.

பொருள் · Meaning in Tamil

இருளிடை எய்துவது - இருள் நிறைந்த இந்த இரவு நேரத்திலே அங்கு சென்று அடைவது; இயல்பு அன்றாம் என - (புதியவர்களாகிய நமக்கு) இயல்பாகாது என்று; பொருள் உற உணர்ந்த - பொருள் பொருந்திய தன்மையை அறிந்து உணர்ந்தவர்களான; அப்புலன் கொள் கேள்வியார் - அறிவமைந்த கேள்வி ஞானம் உடைய வீடணன் முதலியோர்; மருள்உறு சோலையின் - இருள் நிறைந்த ஒரு சோலையிலே; மறைந்து வைகினார்- பிறர் எவரும் அறியாதபடி இரவுமுழுதும் மறைந்து தங்கியிருந்தார்கள்; உருள் உறு தேரவன் - ஒற்றையாழித் தேரை உடையவனாகிய சூரியன்; உதயம் எய்தினான் - உதயகிரியை அடைந்தான்.

பொருள் உற உணர்ந்த - உலகியல்பை உணர்ந்த. உருள்- சக்கரம். உருள் உடைத் தேரவன் - ஒற்றைச் சக்கரத் தேரை உடைய சூரியன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To arrive in the darkness would not be proper," thought
  2. those wise and learned ones who understood how things truly are,
  3. and they stayed hidden in a dark grove;
  4. then he of the wheeled chariot, the sun, rose.

What the poem says

Since strangers arriving at an army camp at night would be suspected, Vīṭaṇaṉ and his ministers spend the night hidden in a grove. Then the sun rises in its one-wheeled chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iruḷiṭai eytuvatu iyalpu aṉṟām' eṉa
poruḷ uṟa uṇarnta ap pulaṉ koḷ kēḷviyār
maruḷuṟu cōlaiyiṉ maṟaintu vaikiṉār;
uruḷuṟu tēravaṉ utayam eytiṉāṉ.