கம்பராமாயணம் 6431 · யுத்த 4.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அப்புறத்து - அடுத்த பகுதியான அந்த இடத்திலே; இராமன் - இராமபிரான்; அவ் அலங்கு வேலையை - அந்த அலை வீசுகின்ற தென் கடலை; குப்புறக் கருதுவான் - தாண்டி, மறுகரை சேர நினைப்பவன்; குவளை நோக்கிதன் - குவளை மலர் போன்ற கண்களை உடைய சீதா பிராட்டியின்; துப்பு உறச் சிவந்த வாய்- பவளம் போன்ற சிவந்த வாயை; நினைந்து சோர்குவான் - எண்ணி, மனம் சோர்ந்தவனாக; இப்புறத்து இருங்கரை- கடலில் இப்புறமான வடபுறத்தின் பெரிய கரையின்; மருங்கின் எய்தினான் - பக்கத்தில் சென்று சேர்ந்தான்.
அலங்குதல் - அலைவீசுதல். குப்புறக்கருதுதல் - தாண்டி அப்பாற் செல்ல நினைத்தல். துப்பு - பவளம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the other side, Irāmaṉ, pondering how to cross that tossing sea,
- drooping as he thought of the coral-red lips
- of the lily-eyed one,
- came to the edge of the great shore on this side.
What the poem says
The scene shifts to Irāmaṉ, who is wondering how to cross the ocean to Laṅkā. He is sick at heart with longing for Cītai, whose eyes are like blue lilies and whose lips are red as coral, and he walks along the northern shore.