கம்பராமாயணம் 6432 · யுத்த 4.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கானலும்- கடற்கரைச் சோலையும்; கழிகளும் - உப்பங்கழிகளும்; மணலும் - கடற்கரை மணலும், கண்டலும் - தாழைப்புதர்களும்; பானலும் குவளையும் - கருநெய்தலும், குவளை மலரும்; பரந்த புன்னையும் - கடற்கரையில் பரந்துள்ள புன்னை மரங்களும்; மேல்நிறை அன்னமும் - அந்தப் புன்னை மரங்களின் மேல் நிறைந்திருக்கும் அன்னப் பறவைகளும்; பெடையும் - பெண் அன்னங்களும்; வேட்கை கூர் பூநிறை சோலையும் - காண்போர் விரும்பும் மலர் நிறைந்த சோலைகளும்; புரிந்து நோக்கினான் - ஆகியவைகளை எல்லாம் இராமபிரான் விருப்பத்துடன் பார்க்கலானான்.
கானல் - கடற்கரைச் சோலை. கண்டல் - தாழை. பானல் - கரு நெய்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The seaside groves and backwaters, the sand and the screwpine,
- the dark lilies and blue water-lilies, the spreading puṉṉai trees,
- the swans that throng upon them and their mates,
- and the flower-filled groves that stir desire — he gazed on them with longing.
What the poem says
Irāmaṉ looks over the coastal landscape: groves, salt lagoons, sand, screwpine thickets, water-lilies and puṉṉai trees full of swans with their mates. In classical Tamil poetry the seashore is the landscape of lovers' separation, and every pair of birds makes him think of Cītai.