கம்பராமாயணம் 6433 · யுத்த 4.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தரங்கம் ஈட்டிய - கடல் அலைகள் தொகுத்துச் சேர்த்த; தரளமும் பவளமும் - முத்துக்களையும் பவளங்களையும்; திரள் மணிக்குப்பையும் - திரண்டுள்ள பலவகை மணிக் குவியல்களையும்; கனக தீரமும் - பொன்துகள் நிறைந்த கரைப் பரப்பையும்; மருளும் மென் பொதும்பரும் - பார்த்தவர்கள் அஞ்சும்படியான மெல்லிய சோலைகளையும்; மணலின் குன்றமும் - மணல் திடல்களையும்; புரள் நெடும் திரைகளும் - புரண்டு எழுகின்ற பெரிய அலைகளையும்; புரிந்து நோக்கினான் - இராமபிரான் விரும்பிப் பார்த்தான்.
தரங்கம் - அலை. தீரம் - கரை. பொதும்பர்- சோலை. கடல் அலைகள் கொணர்ந்து ஒதுக்கிய தரளம் முதலியவை பிராட்டி நினைவை இராமபிரானுக்கு ஊட்டின. சீதையை நினையும் விருப்பத்தைப் புரிந்து நோக்கினான் என்றார். புரிதல்- விரும்புதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pearls and coral, the heaps of clustered gems the waves had gathered,
- the golden shore, the soft groves that bewilder, the hills of sand,
- and the long rolling breakers —
- he gazed upon them with longing.
What the poem says
Irāmaṉ goes on looking at the shore, with its pearls, coral and gems washed up by the waves, its golden sand, groves and dunes, and its rolling surf. The commentary notes that all these beautiful things remind him of Cītai, and that he looks at them because he longs to think of her.