கம்பராமாயணம் 6434 · யுத்த 4.28

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மின் நகு மணிவிரல் தேய வீழ்கண் நீர்
துன்னரும் பெரும் சுழி அழிப்பச் சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னையம் பொதும்பரும் புக்கு நோக்கினான்.

பொருள் · Meaning in Tamil

மின் நகுமணி விரல் தேய - மின்னலைப் பழிக்கும்படியான அழகிய விரல்கள் தேயவும், வீழ் கணீர் துன்னரும் பெருஞ்சுழி அழிப்ப - கண்களில் இருந்து சிந்தும் கண்ணீர் அரிய பெரிய சுழிகளை அழிக்கவும்; இன் நகை நுளைச்சியர் - இனிய புன் முறுவலை உடைய வலைச்சியர்; சோர்வினொடு இழைக்கும் - மனச் சோர்வுடன் தரையில் எழுதும் கூடல் இழைத்துப் பார்த்ததால் ஏற்பட்ட; ஆழிசால் புன்னை அம்பொதும்பரும்- சுழிகள் ஆங்காங்கு காணப்படும் புன்னைமரச் சோலைகளிலும்; புக்கு நோக்கினான் - இராமபிரான் சென்று பார்த்தான்.

வீழ்கணீர் - சிந்தும் கண்ணீர். பெருஞ்சுழி - கூடற் சுழி. தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வருவானோ, மாட்டானோ என, தரையிலே சுழிகள் எழுதிப் பார்ப்பாள். "தெள்ளியார் பலர்கை தொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ் சோலைமணாளனார் பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிடக் கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே" என்பது நாச்சியார் திருமொழி (4-1). தரையில் சுழி எழுதும் போது இரு கோடுகளும் சேர்ந்து கூடினால் தலைவன் வருவான் என்பது மகளிர் நம்பிக்கை என இலக்கிய மரபு பேசும். கூடலிழைத்தல் எனப் பெறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their gem-like fingers, mocking lightning, worn away, their falling tears
  2. washing out the great spirals so hard to close,
  3. the sweet-smiling fisher-women traced them in their sadness —
  4. into the lovely puṉṉai groves full of such circles he went and looked.

What the poem says

Irāmaṉ wanders into the puṉṉai groves, where the sand is covered with spirals drawn by the fisher-women. In Tamil love poetry a woman parted from her lover draws a spiral on the ground: if the two ends meet, he will come back. Here their fingers are worn from drawing, and their tears wash the circles away before they can close. The commentary cites Āṇṭāḷ's Nācciyār Tirumoḻi on this custom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ naku maṇi viral tēya vīḻ kaṇīr
tuṉṉa arum peruñ cuḻi aḻippac cōrviṉōṭu
iṉ nakai nuḷaicciyar iḻaikkum āḻi cāl
puṉṉai am potumparum pukku nōkkiṉāṉ.