கம்பராமாயணம் 6435 · யுத்த 4.29

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூதிர் நுண் குறும்பனித் திவலைக் கோவை கால்
மோதி வெண் திரைபொரு முடவெண் தாழைமேல்
பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான்.

பொருள் · Meaning in Tamil

கூதிர் நுண் குறும் பனித்திவலைக் கோவை, கால் மோதி வெண்திரை வர- குளிர்ந்த மிகச் சிறிய பனித் துளிகளின் தொகுதியுடன், காற்று வீசுவதால் வெண்மைநிற அலைஎழுவதால்; முடவெண் தாழை மேல்- வளைந்த வெண்மை நிறமான தாழை மரத்தின் மீது; பாதிஅம் சிறையிடை - தனது ஒரு பாதி இறகின்இடையே; பெடையைப் பாடு அணைத்து - பெண் அன்னத்தைப் பக்கத்திலே அணைத்துக் கொண்டு; ஓதிமம் துயில்வகண்டு - ஆண் அன்னங்கள் உறங்குவதைக் கண்டு; உயிர்ப்பு வீங்கினான் - இராமபிரான் பெருமூச் செறிந்தான்.

பாடு - பக்கம். உயிர்ப்பு - பெரு மூச்சு. இணைபிரியாத அன்னங்களைக் கண்டு, பிரிவுத்துயரால் இராமபிரான் பெருமூச்செறிந்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As strings of fine, cold mist were driven by the wind
  2. and the white waves came rolling in, on the bent white screwpine
  3. a swan slept, its mate gathered close beneath half its lovely wing;
  4. seeing it, his sighs swelled within him.

What the poem says

On a misty, windy shore Irāmaṉ sees a swan sleeping on a screwpine with its mate tucked under its wing. The sight of a pair that is never parted makes him sigh deeply for Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūtir nuṇ kuṟum paṉit tivalaik kōvai kāl
mōti veṇ tirai vara muṭa veṇ tāḻaimēl
pāti am ciṟaiyiṭaip peṭaiyaip pāṭu aṇaittu
ōtimam tuyilva kaṇṭu uyirppu vīṅkiṉāṉ.