கம்பராமாயணம் 6436 · யுத்த 4.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால்
பெருந்தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான்.
பொருள் · Meaning in Tamil
அருந்துதற்கு இனிய மீன் கொணர - உண்பதற்குச் சுவையான மீனைக் கொண்டு வர; அன்பினால் - பெண் குருகினிடம் கொண்ட பேரன்பால்; பெருந்தடங் கொம்பிடை - தான் வசிக்கும் பெரிய மரக்கிளையில் இருந்து; பிரிந்த சேவலை - பிரிந்து சென்ற ஆண் நாரையை; வரும் திசை நோக்கி - அது வருகின்ற திசையைப் பார்த்து; ஓர் மழலை வெண் குருகு - ஒரு இளமையான வெண்மை நிறம் கொண்ட பெண் நாரை; இருந்தது கண்டு நின்று- காத்திருந்ததைப் பார்த்து அங்குநின்று; இரக்கம் எய்தினான் - இராமபிரான் இரக்கம் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When, out of love, the male had left the great broad branch
- to fetch her sweet fish to eat,
- a young white heron sat gazing toward the way he would return;
- seeing it, he stood still and was moved to pity.
What the poem says
A young female heron sits on a branch watching for her mate, who has gone to catch fish for her. Irāmaṉ, himself waiting for reunion, stops and feels for her.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruntutaṟku iṉiya mīṉ koṇara aṉpiṉāl
perun taṭaṅ kompiṭaip pirinta cēvalai
varun ticai nōkka ōr maḻalai veṇ kuruku
iruntatu kaṇṭu niṉṟu irakkam eytiṉāṉ.