கம்பராமாயணம் 6437 · யுத்த 4.31

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒருதனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால்
பெருவலி வயக்குருகு இரண்டும் பேர்கில
திருகு வெஞ்சினத்தன தெறுகண் தீயன
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான்.

பொருள் · Meaning in Tamil

ஒருதனிப் பேடை மேல் - தனியாக நின்ற ஒருபெண் நாரையிடம்; உள்ளம் ஓடலால்- மனம் செல்லுதலால்; பெருவலி வயக்குருகு இரண்டும் - பெரிய வலிமை மிக்க இரண்டு ஆண் நாரைகள்; பேர்கில திருகு வெஞ்சினத்தன - அந்த இடத்தை விட்டுப்பெயராதனவாய், மிகுந்த சினத்துடன்; தெறுகண் தீ உக - கண்கள் நெருப்புப் பொறிசிந்த; பொருவனகண்டு - அந்த ஆண் நாரைகள் தமக்குள் போரிடுவதைக் கண்டு; தன் புருவம் கோட்டினான் - இராமபிரான் கோபத்தால் தனது புருவத்தை வளைத்துப் பார்த்தான்.

ஒரு பெண் நாரையை அனுபவிப்பது யார் என்ற போட்டியில் ஆண் நாரைகள் போரிடுதல் அறமன்று என்பதால், சீதையைக் கவர்ந்து சென்று சிறை வைத்திருந்த இராவணனது கொடுஞ்செயல் நினைவுக்கு வர இராமன் கோபம் கொண்டு புருவத்தை வளைத்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because their hearts ran after one lone female,
  2. two strong and mighty herons would not give way;
  3. in twisting, fierce rage, fire dropping from their burning eyes,
  4. they fought; seeing it, he bent his brows in anger.

What the poem says

Two male herons fight furiously over a single female, their eyes blazing. The sight reminds Irāmaṉ of Irāvaṇaṉ, who carried off another man's wife, and he frowns in anger at that wrong.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oru taṉip pēṭaimēl uḷḷam ōṭalāl
peru vali vayak kuruku iraṇṭum pērkila
tiruku veñ ciṉattaṉa teṟu kaṇ tī ukap
poruvaṉa kaṇṭu taṉ puruvam kōṭṭiṉāṉ.