கம்பராமாயணம் 6438 · யுத்த 4.32

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உள்நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்
தண்நிறப் பவளவாய் இதழை தன் பொதி
வெண்நிற முத்தினால் அதுக்கி விம்மினான்.

பொருள் · Meaning in Tamil

உள் நிறை ஊடலில் - பெண் அன்னத்தின் உள்ளத்தில் நிறைந்த ஊடலில்; தோற்ற ஓதிமம் - தோற்று, பணிந்த ஆண் அன்னம்; கண்ணுறு கலவியில் - இரண்டு உடம்பும் ஒன்று பட்டு மகிழ்ந்த கலவி இன்பத்திலே; வெல்லக் கண்டவன் - ஆணன்னம் வெற்றி கொண்டதைக் கண்ட ராமபிரான்; தண் நிறப்பவளவாய் இதழை - குளிர்ந்த பவளம் போன்ற தனது வாயின் உதடுகளை; தற் பொதி வெண் நிறமுத்தினால் - அந்த இதழ்களால் மறைக்கப் பட்டுள்ள வெண்மையான முத்துப் போன்ற பற்களால்; அதுக்கி விம்மினான் - மெல்ல அழுத்தி விம்மினான்.

'ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும், கூடலில் காணப்படும்' என்னும் குறள் (1327) ஒப்பிடத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the swan that had lost in the lovers' quarrel that filled her heart
  2. win in the meeting of their bodies,
  3. he pressed his cool, coral-red lips
  4. with the white pearls they enclose, and sobbed.

What the poem says

Irāmaṉ watches a pair of swans. The male lost the quarrel and gave in, but wins in the joy of their making up. Irāmaṉ bites his lip and sobs. The commentary quotes a Tirukkuṟaḷ couplet: the one who loses a lovers' quarrel is the true winner, as their reunion shows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷ niṟai ūṭalil tōṟṟa ōtimam
kaṇṇuṟu kalaviyil vellak kaṇṭavaṉ
taṇ niṟap pavaḷa vāy itaḻai taṟ poti
veṇ niṟa muttiṉāl atukka vimmiṉāṉ.