கம்பராமாயணம் 644 · பால 10.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரசின் வைகி அறனின் அமைந்துழி,
விரசு கான் இடைச் சென்றனன் வேட்டை மேல்
உரை செய் மாதவத்து ஓங்கு வசிட்டனாம்
பரசு வானவன்பால், அணைந்தான் அரோ.
பொருள் · Meaning in Tamil
அறனின் அமைந்துழி - அறநெறியிலே அமைந்து; அரசின் வைகி - (இங்ஙனம் இவன்) அரசாட்சியிலே பொருந்தி வருங்கால்; வேட்டைமேல் - (ஒரு நாள்) வேட்டையின் நிமித்தம்; விரசு கானிடைச் சென்றனன் - அடர்ந்த காட்டினிடையே சென்று; உரைசெய் - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற; மா தவத்து ஓங்கல் - தவத்திலே மேம்பட்ட; வசிட்டன் ஆம் - வசிட்டமுனிவனாகிய; பரசுவான் - யாவராலும் துதிக்கப்படுகிற; அவன்பால் - அந்த முனிவனிடத்தில்; அணைந்தான் - சேர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While he dwelt in kingship, settled in righteousness,
- he went into the dense forest to hunt,
- and came to the praised heavenly one,
- Vaciṭṭaṉ, the summit of renowned great penance.
What the poem says
While King Kaucikaṉ ruled justly, he once went hunting in a thick forest and came to the hermitage of Vaciṭṭaṉ, the celebrated sage whom all revere, the family preceptor of Irāmaṉ's own line.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1araciṉ vaiki aṟaṉiṉ amaintuḻi,
viracu kāṉiṭaic ceṉṟaṉaṉ vēṭṭaimēl
uraicey mā tavattu ōṅkal vaciṭṭaṉām
paracu vāṉavaṉpāl, aṇaintāṉ arō.