கம்பராமாயணம் 645 · பால 10.93

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அருந்ததி கணவன், வேந்தற்கு அரும் கடன் முறையின் ஆற்றி,
'இருந்து அருள் தருதி' என்ன, இருந்துழி,'இனிது நிற்கு
விருந்து இனி அமைப்பென்' என்னாச், சுரபியை விளித்து,'நீயே
சுரந்து அருள் அமிர்தம்' என்ன, அருள் முறை சுரந்தது அன்று ஏ.

பொருள் · Meaning in Tamil

அருந்ததி கணவன் - (அப்பொழுது) அருந்ததி கணவனான வசிட்டமுனிவன்; வேந்தற்கு - (இந்தக்) கௌசிக முனிவனுக்கு; அருங் கடன் - செய்வதற்கு அரிய உபசாரக் கடமைகளை; முறையின் ஆற்றி - முறை தவறாமல் செய்து; இருந்து - (நீர் இங்கே) தங்கியிருந்து செல்ல; அருள் தருதி என்ன - கருணை செய்க என்று கேட்டுக்கொள்ள; இருந்த உழி - (கௌசிகன் அவ்வாறே அவ்விடம்) இருந்தபொழுது; இனி நிற்கு - இனி உமக்கு; விருந்து இனிது - விருந்திட்டு இனிதாக; அமைப்பென் என்னா - உபசரிப்பேன் என்று கூறி; சுரபியை விளித்து - (உடனே) காம தேனுவை அழைத்து; நீயே அமிர்தம் சுரந்து அருள் என்ன - அமுதம் (போன்ற உணவு முதலியவற்றை) நீயே இவருக்கு இப்போது சுரந்து அளிப்பாயாக என்று நியமிக்க; அருள் முறை - (அத் தெய்வப் பசு) வசிட்டன் அருளியபடியே; அன்றே - அப்பொழுதே (உணவு முதலிய உபசாரப் பண்டங்களை); சுரந்தது - சுரந்து அளித்தது.

அருந்ததி: வசிட்டரின் மனைவி; கற்பு நிலையில் மிக மேம்பட்டவள்; கற்புத் தன்மைக்கு இவளையே உவமையாகக் கொள்வர்.

சுரபி - காமதேனு - இது பாற்கடலைக் கடைந்த காலத்து அதனினின்று தோன்றியது; வேண்டுகின்றவர் வேண்டு பொ

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Aruntati's husband performed the rare duties of hospitality to the king in due order,
  2. and said, 'Be gracious and stay.' When he stayed, he said, 'I will now
  3. sweetly prepare a feast for you,' and called Curapi: 'You yourself
  4. pour forth nectar, graciously,' and as he graciously bade, she poured it forth then and there.

What the poem says

Vaciṭṭaṉ, husband of Aruntati, the model of wifely chastity, receives King Kaucikaṉ with every courtesy and asks him to stay. He then summons Curapi, the wish-granting cow Kāmadhenu who rose from the churned ocean of milk, and asks her to provide a feast. At once she produces food for the king and his whole army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruntati kaṇavaṉ, vēntaṟku aruṅ kaṭaṉ muṟaiyiṉ āṟṟi,
'iruntaruḷ taruti' eṉṉa, iruntuḻi,' iṉitu niṟku
viruntu iṉitu amaippeṉ' eṉṉāc, curapiyai viḷittu,' nīyē
curantaruḷ amirtam' eṉṉa, aruḷ muṟai curantatu aṉṟē.