கம்பராமாயணம் 646 · பால 10.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(வசிட்டன் கோசிகனை நோக்கி) அரச - மன்னவ! அறு சுவைத்து ஆய உண்டி - அறுசுவைகளோடு கூடிய இந்த உணவுகளை; நின் அனிகத்தோடும் - நும் சேனைகளுடன்; பெறுக - பெற்று உண்பீராக; என - என்று சொல்லி; அளித்து - (காமதேனு சுரந்தவற்றை யெல்லாம்) அருளொடு கொடுத்து; வேந்தோடு யாவரும் - கோசிகனும் படையினரும்; துய்த்த பின்றை - உண்ட பின்னர்; நறுமலர்த் தாரும் - நறு மணமுள்ள பூமாலைகளையும்; வாசக் கலவையும் - மணமிக்க கலவைச் சந்தனமும்; நல்கலோடும் - யாவர்க்கும் அளித்து உதவ; மன்னன் - இந்த விசுவாமித்திரன்; உறுதுயர் தணிந்து - தாம் அடைந்திருந்த களைப்புத் தீர்ந்தபின்; உய்த்து உணர்ந்து - ஆராய்ந்து உணர்ந்தவராய்; உரைக்கல் உற்றான் - (வசிட்டனை நோக்கி ஒரு வார்த்தை) சொல்லத் தொடங்கினான்.
அறுசுவை: உப்பு, புளிப்பு, துவர்ப்பு, தித்திப்பு, கார்ப்பு, கைப்பு என்பன. உறுதுயர்: வழிநடையாலும், வேட்டைத் தொழிலாலும் நேர்ந்த இளைப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'King, take this food of six flavours together with your army,'
- he said, and gave it; when the king and all had enjoyed it,
- and he had also bestowed fragrant flower garlands and scented sandal paste,
- the king, his weariness relieved, pondered and began to speak.
What the poem says
Vaciṭṭaṉ serves the king and his whole army a feast of all six tastes — salt, sour, astringent, sweet, pungent and bitter — produced by the wonder-cow, and then honours them with garlands and sandal paste.
Refreshed after the fatigue of travel and the hunt, King Kaucikaṉ thinks things over and begins to speak, setting up his fateful request.