கம்பராமாயணம் 6440 · யுத்த 4.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உறைவிடம் எய்தினான் - இராமபிரான் தான் தங்கியிருக்கும் பாசறையை அடைந்தான்; ஒருங்கு கேள்வியின் துறை அறிதுணைவரோடு - ஒரு சேர, நல்ல நூல்களை கேட்டறிந்த துணைவர்களான சுக்கிரீவன் முதலியவர்களோடு; இருந்த சூழலில் - இராமபிரான் அமர்ந்திருந்த அந்த இடத்துக்கு; அயிர்ப்பு இல் சிந்தையான் - எவ்வித ஐயமுமில்லாத மனத்தினனாகிய; அறை கழல் வீடணன் - ஒலிக்கின்ற கழல் அணிந்த கால்களை உடைய வீடணன்; முறை படுதானையின் மருங்கு முற்றினான் - முறையாக அங்கு தங்கியிருந்த வானரப் பக்கத்திலே சேர்ந்தான்.
கேள்வியின் துறை - நூற்கேள்வியின் துறை. அரக்க இனத்தினனான வீடணன், வானர சேனைக்குப் பக்கம் செல்வதால் ஏதேனும் தவறுண்டாகுமோ என்ற ஐயம் எதுவுமின்றிச் சென்றான் என்பதை 'அயிர்ப்பில் சிந்தையான்' என்றது காட்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He reached his dwelling, where he sat together with companions
- versed in the ways of learning; and to the side of that well-ordered army
- came Vīṭaṇaṉ of the ringing anklets,
- his mind free of all misgiving.
What the poem says
Irāmaṉ goes back to his camp and sits with Cukkirīvaṉ and his other learned companions. At that moment Vīṭaṇaṉ arrives at the edge of the monkey army. Though he is a demon, he has no fear about approaching his enemy's camp.