கம்பராமாயணம் 6441 · யுத்த 4.35

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முற்றிய குருசிலை'முழங்கு தானையின்
உற்றனர் நிருதர் வந்து'என்ன ஒன்றினார்
'எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்'என்று இடை
சுற்றினர் உரும் எனத் தெழிக்கும் சொல்லினார்.

பொருள் · Meaning in Tamil

முற்றிய குரிசிலை- அங்கு வந்தடைந்த வீடணனை (பார்த்தவானர வீரர்கள்) முழங்கு தானையின் உற்றனர் நிருதர் வந்து என்ன - ஆரவாரம் மிக்க வானரப் படையில் அரக்கர் வந்து புகுந்தனர் என்று; ஒன்றினார்- வீரர்கள் எல்லாம் ஒன்றாகத் திரண்டனர்; எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று - அடியுங்கள் பிடியுங்கள் ஆயுதங்களால் எறியுங்கள் என்று கூறி; உரும் எனத் தெழிக்கும் சொல்லினர் - இடியென அதட்டும் சொல்லினராகி; இடை சுற்றினர் - வீடணன் முதலியோரைச் சூழ்ந்து கொண்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the prince who had arrived, and crying, "Rākṣasas have come into our roaring army!",
  2. they gathered together; "Strike! Seize! Hurl your weapons!" —
  3. with words that rumbled like thunder
  4. they closed in all around them.

What the poem says

The monkey warriors spot Vīṭaṇaṉ and his ministers and raise the alarm that demons have entered the camp. They crowd round them, shouting like thunder to beat, seize and attack the intruders.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟṟiya kuricilai 'muḻaṅku tāṉaiyiṉ
uṟṟaṉar nirutar vantu' eṉṉa oṉṟiṉār
'eṟṟutir; paṟṟutir; eṟitir' eṉṟu iṭai
cuṟṟiṉar urum eṉat teḻikkum colliṉār.