கம்பராமாயணம் 6442 · யுத்த 4.36

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தருமமே கொணர்ந்துதான் தந்தது - இந்த அரக்கர்களைத் தரும தேவதை தானே நம்மிடம் கொண்டு வந்து தந்தது; இவன் வெந்தொழில் தீவினை பயந்த மேன்மையான் - இவன், கொடுந்தொழில் செய்யவந்த தீயவினை பயந்த மேன்மையோன் ஆவான்; வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் - வந்தவனாகிய இவன் இலங்கை வேந்தனான இராவணனே ஆகும். நம் சிந்தனை முடிந்தன - இலங்கை வேந்தனை வெல்ல வேண்டும் என்ற நமது எண்ணம் நிறைவேறிவிட்டது; என்னும் சிந்தையார்- என்ற எண்ணம் கொண்டவர்களாக அந்த வானர வீரர் இருந்தனர்.

இவன் கொடுந் தொழிலன் தீவினை பயனளிக்கப் பெற்றமையால் கொடுஞ் செயல் புரிவதில் மிக்கவனாவான் என்பதை 'வெந்தொழில் தீவினை பயந்தமேன்மையான்' என்றார். வந்த இவன் இலங்கை வேந்தன் இராவணனே; இராவணனை வெல்லுவது என்ற நம் விருப்பம் நிறைவேறியது என்பார் 'நம் சிந்தனை முடிந்தன' என்றார். நமக்குச் சிரமமின்றி தரும தேவதையே நமக்கு இவனைத் தந்தது என்பார் 'தருமமே கொணர்ந்து தந்தது' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Dharma itself has brought him here and handed him to us; this one
  2. is eminent in cruel deeds, the fruit of evil karma;
  3. he who has come must be the king of Laṅkā; our
  4. purpose is accomplished!" — so they thought.

What the poem says

The monkeys mistake Vīṭaṇaṉ for Irāvaṇaṉ himself. They believe righteousness has delivered their enemy into their hands and that their goal of defeating the king of Laṅkā is already achieved.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tantatu tarumamē koṇarntutāṉ; ivaṉ
ven toḻil tīviṉai payanta mēṉmaiyāṉ
vantaṉaṉ ilaṅkaiyar maṉṉaṉ ākum; nam
cintaṉai muṭintaṉa eṉṉum cintaiyār.