கம்பராமாயணம் 6443 · யுத்த 4.37

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'இருபது கரம்; தலை ஈரைந்து" என்பர்; இத்
திரு இலிக்கு; அன்னவை சிதைந்தவோ? என்பார்
பொரு தொழில் எம்மொடும் பொருதி போர்! என்பார்
ஒருவரின் ஒருவர் முன் உறுக்கி ஊன்றுவார்.

பொருள் · Meaning in Tamil

அத்திருவிலிக்கு - அந்த நற்பேறில்லாத தீவினையாளனுக்கு; இருபதுகரம் தலை ஈர் ஐந்து என்னும் - இருபது கைகளும், பத்துத் தலைகளும் உண்டு என்பார்களே; அன்னவை சிதைந்தவோ என்பார்- அவை எல்லாம் சிதைந்து அழிந்தனவோ என்பார்கள்; பொரு தொழில் எம்மொடு பொருதிபோர் என்பார்- போர்த் தொழில் வல்லவன் என்றால் எங்களோடு போரிடவருக என்பார்கள்; ஒருவரின் ஒருவர் சென்று - வானர வீரர்களில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்று; உறுக்கி ஊன்றுவார் - சினந்து எதிர்க்கலாயினர்.

திருவிலி - நல்வினைப் பயன் இல்லாதவன். உறுக்கி - வெகுண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "That luckless wretch has twenty arms and ten heads, they say;
  2. have they all been smashed?" some said;
  3. "If you know how to fight, then fight with us!" said others;
  4. one after another they pressed forward, raging, and stood against them.

What the poem says

The monkeys taunt the stranger they take for Irāvaṇaṉ. Where are his famous twenty arms and ten heads, they jeer; have they been broken already? Each pushes ahead of the others to challenge him to fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'irupatu karam; talai īr aintu" eṉṉum; at
tiruvilikku; aṉṉavai citaintavō? eṉpār
poru toḻil emmoṭum poruti pōr! eṉpār
oruvariṉ oruvar ceṉṟu uṟukki ūṉṟuvār.