கம்பராமாயணம் 6445 · யுத்த 4.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமைப்பதன் முன் - கண்ணை இமைப்பதற்குள்; விசும்பு எழுந்து போய பின் - இவர் ஆகாயத்திலே எழுந்து சென்ற பின்பு; அமைப்பது என் பிறிது - நாம் வேறு என்ன செய்ய முடியும்; இவர் அரக்கர் அல்லரோ - இவர்கள் அரக்கர்கள் அல்லவா?; சமைப்பது கொலை அலால் - நாம் செய்யத்தக்கது இவர்களைக் கொலை செய்வதே அல்லாமல், தக்கது யாவதோ - தகுந்த செயல் வேறு யாதுள்ளது?; குமைப்பது நலன்என - உருத்தெரியாமல் இவர்களை அழிப்பதே நல்லதாகும் என்று; முடுகிக் கூறுவார் - விரைவாகக் கூறுவாராயினர்.
சமைத்தல் - செய்தல். குமைப்பது - அழிப்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If, in the blink of an eye, they rise into the sky and are gone,
- what else could we do then? Are they not rākṣasas?
- What is fitting except to kill them?
- Best to crush them!" they urged in haste.
What the poem says
The hot-headed monkeys warn that demons can vanish into the sky in an instant. Since these are rākṣasas, they argue, killing them now is the only sensible course.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'imaippataṉmuṉ vicumpu eḻuntu pōya piṉ
amaippatu eṉ piṟitu? ivar arakkar allarō?
camaippatu kolai alāl takkatu yāvatō?
kumaippatu nalaṉ' eṉa muṭukik kūṟuvār.